திறன் மேம்பாடு பயிற்சி

திருப்புத்துார், ஜூலை12-

கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி முகாம் நடந்தது.

முதல்வர் சசிக்குமார் வரவேற்றார். முபா அகாடமி நிறுவனர் முருகபாரதி, தலைவர் சொக்கலிங்கம், விவேகானந்தா கல்வி அறக்கட்டளை இயக்குனர் ராஜகோபாலன் பேசினர்.

பயிற்றுநர்கள் நீதிராஜா, அன்பரசன், சசிக்குமார், ஹரிஹரன், ரஞ்சித், கண்ணன், நாடிமுத்து, செல்வக்குமார் பயிற்சி அளித்தனர். பயிற்சி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Advertisement