பாசத்துடன் துாக்கும் தாத்தாவிடம் 'பேட் டச்' என்கிறாள் பேத்தி
எழுத்தாளர் சகா எழுதிய 'இவ்விடம் அன்பு கிடைக்கும்' என்ற சிறுகதை நுால் குறித்து, எழுத்தாளர் புன்னகை ரமேஷ்குமார் தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
வாசிக்கும் எல்லா நுால்களும் நம்மை கவர்ந்து விடுவதில்லை. ஆனால் சில நுால்கள் நாம் எப்போதும் நினைவில் வைத்து கொள்ளக்கூடிய நுாலாக இருக்கும். அந்த நுால்கள் நம் வாழ்வின் ஏதோ ஒரு பகுதியை நினைவூட்டுவதாக இருக்கும்.
அப்படி பட்ட நுால்தான், எழுத்தாளர் சகா எழுதிய 'இவ்விடம் அன்பு கிடைக்கும்' என்ற இந்த சிறுகதை நுால். முதல் கதையில் தொடங்கி இறுதிக் கதை வரை வாசகனை கைபிடித்து கதைக்குள் அழைத்துச் செல்லும் நடையில் எழுதப்பட்டுள்ளது.
சோகம், காதல், நட்பு, கோபம், சோகம், பழிவாங்குதல், நேர்மை என, பலவிதமான உணர்வுகளை இந்தக் கதைகள் நமக்குள் கடத்துகின்றன.
தன் கீழ் பணி புரியும் கடைநிலை ஊழியரின் நடவடிக்கையை தாழ்வாகவும், சந்தேகமாகவும் பார்க்கும் அதிகாரியின் மனநிலையை உளவியல் ரீதியாக அணுகி கதையாக்கி இருக்கிறார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு நேரில் பார்க்கும் பேத்தியைப் பாசத்துடன் அணைக்கும் தாத்தாவை, 'பேட் டச்' என்று அவமானப்படுத்தும் பேத்தி, அதை எண்ணி நிலைகுலையும் தாத்தா என, இந்த தொகுப்பு முழுவதும் நல்ல கதைகள் உள்ளன.
ஒவ்வொரு கதையின் முடிவிலும் அவிழும் முடிச்சுகள் கதையின் இறுதியைத் தீர்மானிக்கின்றன.
எளிய உரைநடை, எதிர்பார்க்காத கதை முடிவு, நம் ஞாபக அடுக்கிலிருந்து இதமான நினைவுகளை அசைபோட வைக்கும் சம்பவங்கள் என, மிக நல்ல சிறுகதைள் இந்த தொகுப்பில் உள்ளன.
மேலும்
-
செவிலியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
-
பயிர்க்கடன் தள்ளுபடி பெறும் விவசாயிகள் பட்டியல் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஆய்வு
-
அரசு மருத்துவமனையில் இயற்கை மருத்துவ பிரிவு கட்டடம் துவக்கம்
-
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் கார் மீது கல்வீச்சு ‘மாஜி’ அமைச்சர் மீது புகார்: செஞ்சி அருகே பதற்றம்
-
முந்திரி பண்ணைக்கு நடமாடும் வாகனம் வழங்கல்
-
வானில் மழையென பொழிந்த மாங்கனிகள் விதைகளாக விழுந்து விருட்சமாகிறது காரைக்கால் நகராட்சியின் அசத்தல் முயற்சி