மயிலத்தில் கிருத்திகை விழா

மயிலம்: மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவிலில் கிருத்திகை விழா நடந்தது.

அதனையொட்டி நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு பாலசித்தர், விநாயகர்,  வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், நவகிரக சுவாமிகளுக்கு அபிஷேக, வழிபாடு நடந்தது. 11:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து மூலவர் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8:00 மணிக்கு  உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் மலை வலம் வந்தார்.

விழா ஏற்பாடுகதளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement