ரேஸ்கோர்சில் குழந்தைகளுக்கான கதை நுால்கள் வெளியீடு

ரேஸ்கோர்ஸ்: கோவை மைத் கிரியேட்டர்ஸ் சார்பில், குழந்தைகளுக்கான மூன்று கதை நுால்கள், ரேஸ்கோர்ஸ் கோவை உற்பத்தித் திறன் குழு அரங்கில் வெளியிடப்பட்டன.

நுால்களை வெளியிட்ட ரூபி மெட்ரிக் பள்ளியின் தாளாளர் சுகுமார் பேசுகையில், ''இன்று குழந்தைகள் அறிவு கூர்மை உள்ளவர்களாகவும், அறிவுப்பூர்வமான கேள்விகள் கேட்பவர்களாகவும் உள்ளனர். அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான நுால்களை எழுத வேண்டும். பெற்றோர்கள் அவசியம் இந்த நுால்களை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும்,'' என்றார்.

உஷாராஜன், மாதுளா தினேஷ்குமார் மற்றும் மைதிலி யோகராஜ் ஆகியோர் நுால்கள் குறித்து கருத்துரை வழங்கினர். நுாலாசிரியர்கள் சீதா பெருமாள், நகுர் மற்றும் சாந்தம் ஆகியோர் ஏற்புரையாற்றினர்.

Advertisement