போதைப்பொருள் புழக்கம் குறைந்துள்ளது: கமிஷனர்

கோவை: ''கோவையில் போதைப்பொருள் புழக்கம் குறைந்துள்ளது,'' என்று போலீஸ் கமிஷனர் கண்ணன் கூறினார்.

அவர் கூறியதாவது:

போதைப்பொருட்கள் பெரும்பாலும் பார்சல், கூரியர், ஆம்னி பஸ் வழியாக கடத்தப்படுகின்றன. இதனால், விநியோகத்தை தடுக்க இந்நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பார்சல், கூரியர் மற்றும் ஆம்னி பஸ் நிறுவனங்கள் இனி பார்சல் அனுப்புவோரின் முழு முகவரி, மொபைல் எண் ஆகிய விவரங்களை சரிபார்த்து பதிவு செய்ய வேண்டும்.

பார்சலுக்குள் என்ன உள்ளது என்பதை தெளிவாக குறிப்பிட்ட உறுதிமொழி படிவத்தை கட்டாயம் பெற வேண்டும். கோவையில் போதைப்பொருள் புழக்கம் குறைந்துள்ளது. குறிப்பாக, சின்தடிக் போதைப்பொருள் விநியோகம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement