'தொழில்நுட்பம், சேவை, ஆராய்ச்சியில் தமிழகம் முன்னிலை பெறுவதே லட்சியம்'
சென்னை: 'தமிழகத்தை சேவைகள், தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வடிவமைப்பு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் உலகளாவிய வலிமைமிக்க மையமாக மாற்றுவதே முதல்வர் விஜய் அரசின் லட்சியம்' என, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை: தமிழகத்தின் ஏற்றுமதி வெற்றி என்பது பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டது. இது, நம் தொழில்முனைவோர், தொழிலாளர்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்களின் கடின உழைப்புக்கும், பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட கொள்கை தொடர்ச்சி மற்றும் அடித்தளங்களுக்கும் சான்றாகும்.
இந்த அடித்தளங்களே, தமிழகத்தை இந்தியாவின் வலிமையான தொழில் சூழல்களில் ஒன்றாக உருவாக்கியுள்ளன. நாட்டின் முன்னணி ஏற்றுமதி மாநிலங்களில் மிக உயர்ந்த ஏற்றுமதி வளர்ச்சியை பதிவு செய்திருப்பது, ஊக்கமளிக்கும் மைல்கல். இது, அடுத்த லட்சியத்திற்கு அடித்தளம்.
தமிழகத்தை இந்தியாவின் உற்பத்தி தலைமையிடமாக மட்டும் அல்லாமல், சேவைகள், தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வடிவமைப்பு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் உலகளாவிய வலிமைமிக்க மையமாக மாற்றுவதே அரசின் இலக்கு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
காஞ்சிபுரம் ராஜாஜி சந்தை காய்கறி விலை நிலவரம்
-
ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை 31 வரை அவகாசம் நீட்டிப்பு
-
வட துருவமும் தென் துருவமும் எப்படி ஒன்றாக முடியும்; திருமாவுக்கு வைகோ கேள்வி
-
முறைகேடு வழக்கு; எ.வ.வேலு ஜூலை 15ல் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
-
அணைகள் நீர்மட்டம்
-
ரூ. 8.5 கோடி சம்பளத்தில் வேலை: உதறிவிட்டு சொந்த நிறுவனம் துவக்கிய ஐஐடி பட்டதாரி