வட துருவமும் தென் துருவமும் எப்படி ஒன்றாக முடியும்; திருமாவுக்கு வைகோ கேள்வி
தென்காசி: தவெகவும், திமுகவும் அகில இந்திய அளவில் ஓரணியில் திரள வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியது தனக்கு தூக்கி வாரிப்போட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; திமுக கூட்டணியிலும் தொடர்கிறோம். தவெகவும், திமுகவும் அகில இந்திய அளவில் ஓரணியில் திரள வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் சொன்னதாக வெளியான செய்தி, எனக்கு தூக்கி வாரிப்போட்டது. வடதுருவமும், தென் துருவமும் ஒன்று சேர முடியுமா?
திமுக கூட்டணியில் இருந்து கொண்டு எப்படி அமைச்சரவையில் பங்கெடுக்க முடியும் என்று நினைத்தது, அதிர்ச்சியாக இருந்ததால், நான் அவருக்கு (திருமா) நோபல் பரிசை வழங்க வேண்டும் என்று சொன்னேன். புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. அவர் அரசியலில் உயர வேண்டும் என்று என்னால் இயன்ற உதவிகளை செய்துள்ளேன். 15 ஆண்டுகளாக பக்கபலமாக இருந்துள்ளேன். எதிர்காலத்திலும் அப்படித்தான் இருப்பேன். அவரது மனம் புண்படுமானால், அந்த வார்த்தையை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் அமைச்சரவையில் இருப்போம். திமுகவுடன் தான் உறவு வைத்துக்கொள்வோம் என்று சொல்வது உலகத்திலேயே கேள்விப்படாத விஷயமாக இருக்கிறதே என்று நான் அந்தக் கருத்தை சொன்னேன். இப்போது, அதை வாபஸ் பெற்று விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்
வாசகர் கருத்து (25)
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
09 ஜூலை,2026 - 21:34 Report Abuse
தமிழகத்தில், நிரந்தரமாக கோடிகளை குவிக்கும் கமிஷன் அரசியல் இருக்க வேண்டும். அப்போதுதான் அரசியல்வாதிகள் அனைவருக்கும் அது லாபகரமாக இருக்கும் என்று நினைத்து இருக்கலாம். 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
09 ஜூலை,2026 - 20:44 Report Abuse
இது ஆன்ற பேச்சுகளை கேட்க்க ஏந்தியிருக்குமேயானு தான் விடியல் லண்டன் நோக்கி பயணம். 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
09 ஜூலை,2026 - 20:42 Report Abuse
ஒரு ஜென்மம் சோத்திலும் வாய் வைக்கும் மலத்திலும் வாய் வைக்கும். அது போல் நினைத்து தான் வைக்கோ பேசியிருக்க வேண்டும். 0
0
Reply
Bhaskaran - Chennai,இந்தியா
09 ஜூலை,2026 - 19:52 Report Abuse
ரோஷம் மானம் எதுவும் இல்லாத அரசியல் வியாதி 0
0
Reply
Bhaskaran - Chennai,இந்தியா
09 ஜூலை,2026 - 19:51 Report Abuse
திமுக அதிமுக கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்ததை திருமா மனசில் வச்சு பேசறாரோ 0
0
Reply
KRISHNAN R - chennai,இந்தியா
09 ஜூலை,2026 - 18:56 Report Abuse
சோ அவர்கள், கதை," யாருக்கும் வெட்கமில்லை " 0
0
Shekar - Mumbai,இந்தியா
09 ஜூலை,2026 - 20:07Report Abuse
மன்னிக்கவும், எல்லோரையும் இந்த பச்சோந்தி லிஸ்டில் சேர்க்கவேண்டாம், பெட்டி அரசியல்வாதிகளுக்கு வெட்கமில்லை என்று சொல்லுங்கள் 0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
09 ஜூலை,2026 - 18:25 Report Abuse
"நான் அந்தக் கருத்தை சொன்னேன். இப்போது, அதை வாபஸ் பெற்று விட்டேன்."
இந்த கருத்து சீவல் புதுசா இருக்கிறது . ஒருவேளை இதுதான் அண்ணாயிசமாய் இருக்குமோ ? 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
09 ஜூலை,2026 - 18:22 Report Abuse
என்ன இந்த இருவரும் புருவம் துருவம் என்று பேசிக்கொள்கிறார்கள் என்ன அது ஓகோ இந்த இருவருமே திராவிட மாடல் ஆட்சியில் வட துருவம் தென் துருவமாக இருந்ததை சொல்கிறார்களோ சரியான இரு துருவங்கள் வெளி வந்து ஏனிப்படி தினந்தோறும் அறிக்கைகளை வெளியிடுகின்றன இது சரியான பருவமல்ல 0
0
Reply
shanmukchand - ,
09 ஜூலை,2026 - 17:29 Report Abuse
When DMk and Mdmk were on the same front it was okay for you. 0
0
Reply
krishna - ,
09 ஜூலை,2026 - 17:22 Report Abuse
SAIKO KURUMA 2 PERUKKUM KADUMAYAANA POTTI YAAR MIGA KEVELAMAANA POLITICIAN ENA.ORU PATTIMANDRAM NADATHALAAM. 0
0
Reply
மேலும் 14 கருத்துக்கள்...
மேலும்
-
அரசு குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும்
-
அசிஸ்டெண்ட் பணிக்கு 14ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு
-
மத்திய அமைச்சர் சுற்று பயணம் பாதியில் ரத்து: புதுச்சேரியில் பரபரப்பு
-
'பின்' முறையில் இருந்து கைரேகைக்கு தாவும் மக்கள்
-
ஐ.பி.ஓ.,: 'ஆல்பைன் டெக்ஸ்வேர்ல்டு' ரூ.126 கோடி திரட்ட திட்டம்
-
நெய்வேலி ரவுடி குண்டாசில் கைது
Advertisement
Advertisement