முறைகேடு வழக்கு; எ.வ.வேலு ஜூலை 15ல் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
சென்னை: சாலை அமைக்காமல் ரூ.3.23 கோடி மோசடியில் ஈடுபட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்கு வரும் ஜூலை 15ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் கரூரில் சாலை போடாமல் 3.23 கோடி ரூபாய் மோசடி நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக திமுக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தொகுதி எம்எல்ஏவுமான எவ வேலு மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் ஒன்பது பேர் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வேலு வீடு உட்பட, 20 இடங்களில் கடந்த ஜூன் 25ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
இது தொடர்பாக விளக்கம் அளிக்க கடந்த 3ம் தேதி நேரில் ஆஜராகுமாறு எவ வேலுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அன்றைய தினம் ஆஜராகாத அவர், உடல் நலக்குறைவால் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதால், நேரில் ஆஜராவதில் இருந்த விலக்கு அளிக்கக் கோரியிருந்தார். இதையடுத்து, எவ வேலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸை லஞ்ச ஒழிப்புத்துறை பிறப்பித்திருந்தது.
இதனிடையே, தனக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், லஞ்ச ஒழிப்புத்துறையினர் பிறப்பித்த லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, வரும் 15ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் லுக் அவுட் நோட்டீஸ்க்கு நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், வழக்கை ரத்து செய்யக்கோரும் எ.வ.வேலுவின் மனுவுக்கு ஜூலை 27ம் தேதிக்குள் பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
வாசகர் கருத்து (23)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
09 ஜூலை,2026 - 21:06 Report Abuse
சிங்கப்பூர் அரசாங்கத்திடம் வேலு ஒரு பிராடு. அவன் தமிழகத்தில் அமைச்சராக இருந்தபோது பல ஊழல்கள் செய்திருக்கிறான். தான் கைதுசெய்யப்படுவோம் என்று தெரிந்து அங்கு சிகிச்சைக்காக சென்றிருப்பதாக நாடகம் போடுகிறான். தமிழகத்தின் திருவண்ணாமலையில் அவனுக்கே சொந்தமான மருத்துவமனைகள் உள்ளன. அங்கேயே போய் மருத்துவம் பார்த்துக்கொள்ளவும் என்று கூறி அவனை குண்டுக்கட்டாக தூக்கி விமானத்தில் அடைத்து தமிழகத்துக்கு அனுப்பவும். அப்படி செய்வதால் இந்தியா-சிங்கப்பூர் உறவு மேலும் வலுப்படும். 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
09 ஜூலை,2026 - 20:48 Report Abuse
தீ மு காரனுக்கு எள்ளவும் பயமில்லை. யிருக்கவெ இருக்கு மீன் மார்க்கெட் நீதி மன்றம் மீன்னெல்லாம் கொடுத்து விடுவார்கள். அப்படிகா காலம் ஒட்டி விடலாம். 0
0
Reply
ஈசன் - ,
09 ஜூலை,2026 - 20:22 Report Abuse
ஒரு ஆபரேஷன் செய்ய போகிறீர்கள் என்றால், முதலிலேயே அவர் வெளிநாடு தப்பித்து செல்லாமல் பார்த்துக்கொள்ள முடியாதா. 0
0
Reply
Modisha - Chennai ,இந்தியா
09 ஜூலை,2026 - 19:10 Report Abuse
ஜிலேபியின் இறு முனைகளை கூட கண்டுபிடித்து விடலாம் . சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை கண்டுபிடிக்க முடியாது. இது பத்து வருஷம் இழுக்கும் . 0
0
Reply
Anvar - Singapore,இந்தியா
09 ஜூலை,2026 - 18:20 Report Abuse
வேலு அவர்கள் ஆஜராகவில்லை என்றால் முன்னாள் முதல் அமைச்சரை ஆஜராக சொல்லுங்கள் காரணம் முன்னாள் முதல் அமைச்சருக்கும் மிக பெரிய பொறுப்பு உண்டு 0
0
Reply
ஊர்குருவி - chennai,இந்தியா
09 ஜூலை,2026 - 18:20 Report Abuse
வாழ்க்கையில் சைக்கிள் வாங்கக்கூட காசில்லாதவனெல்லாம் இன்று திராவிடக்கழகத்தில் பதவிபெற்று தனிவிமானங்களில் பார்க்கக்கூடிய அளவில் வளர்ந்தது தமிழ் மக்கள் ஆயிரத்திற்கும் இரண்டாயிரத்திற்கும் கையேந்தி நிற்கும் அளவிற்கு தமிழ் மாநிலத்தை இரண்டு திராவிடர்களும் வளர்ச்சியடைய வைத்துவிட்டன .இன்னும் பலபேர் வெளிநாடு செல்லுவார்கள் .அரசு துரிதமாக செயல்படவேண்டும் ஆனால் கடினம் .ஏனென்றால் இதனால் பலனடைந்து அதிகாரக்கூட்டமும் பெரியது .அவ்வளவு சீக்கிரம் பணியவைக்கமுடியாது . 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
09 ஜூலை,2026 - 18:16 Report Abuse
போடப்படாத சாலைகள் ஒன்றா இரண்டா பல்லாயிரம் தோண்ட தோண்ட வெளிவரும் போடப்படாத சாலைகளின் விவரங்கள் அதற்குள் அவர் சிங்கப்பூரிலிருந்து மாயமாகிவிடுவார் அவரை தேடி பிடிப்பதே மிக மிக கஷ்டம் வேறு எந்த நாட்டிற்கு சென்று வைத்தியம் பார்த்துக்கொண்டிருக்கிறாரோ யாருக்குத்தான் தெரியும் 0
0
Reply
bmk1040 - Chennai,இந்தியா
09 ஜூலை,2026 - 17:24 Report Abuse
பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்தவனை
,வெறும் 3.25 கோடி தான் கொள்ளை அடித்தான் என லஞ்ச ஒழிப்புதுறை கேஸ் போட்டுருக்காமாம் சி.எம் சார். புரிலயே? முதலிலேயே லுக் அவுட் நோட்டீஸ் ஏன் கொடுக்கல? ஏன் சிங்கப்பூருக்கு தப்ப விட்டீர்கள்?அப்ப நீங்களும் உங்க ஆலோசகர்களும் தெரிஞ்சே அந்த அருண் போலிஸை வைச்சு இந்த மெகா கொள்ளையனை தப்ப விடறீங்களா? 0
0
Anvar - Singapore,இந்தியா
09 ஜூலை,2026 - 18:22Report Abuse
முதல் அமைச்சருக்கு கீழே தான் அமைச்சர்கள் வருவார்கள் அப்படி என்றால் வேலு கிடைக்கலேன்னா முன்னால் முதல் அமைச்சர் ஆஜராஹா வேண்டும் என்று உத்தரவு போடுங்கள் 0
0
Reply
K.Ramachandran - Chennai,இந்தியா
09 ஜூலை,2026 - 17:22 Report Abuse
They all know all the loopholes of our justice tem.
Anticipatory bail, bail, quash the case request, appeal after appeal etc...
Only poor citizens bear the brunt of the law.
These powerful politicians are well protected and no one ever ends up in jail.
They all roam free and make a mockery of our law and democracy. 0
0
Reply
sengalipuram - ,இந்தியா
09 ஜூலை,2026 - 17:13 Report Abuse
பொதுவா ஒரு சந்தேகம் ., எந்த திருடனுக்கு திருடும்பொழுது நெஞ்சு வலி வருவதில்லையே போலீசில் அகப்படும் பொழுதுதான் நெஞ்சு வலி வருகிறது ? விஞ்சான ரீதியாக யாராவது விளக்கம் கொடுக்க முடியுமா ? 0
0
Reply
மேலும் 12 கருத்துக்கள்...
மேலும்
-
அரசு குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும்
-
அசிஸ்டெண்ட் பணிக்கு 14ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு
-
மத்திய அமைச்சர் சுற்று பயணம் பாதியில் ரத்து: புதுச்சேரியில் பரபரப்பு
-
'பின்' முறையில் இருந்து கைரேகைக்கு தாவும் மக்கள்
-
ஐ.பி.ஓ.,: 'ஆல்பைன் டெக்ஸ்வேர்ல்டு' ரூ.126 கோடி திரட்ட திட்டம்
-
நெய்வேலி ரவுடி குண்டாசில் கைது
Advertisement
Advertisement