ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை 31 வரை அவகாசம் நீட்டிப்பு
திருவள்ளூர்:தொழிற்பயிற்சி நிலையங்களில், நடப்பு கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை, வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நடப்பு கல்வி ஆண்டில், அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டில் நேரடி மாணவர் சேர்க்கை, வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கு உதவிடும் வகையில், அம்பத்துார், வடகரை, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஆகிய இடங்களில், சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எட்டு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், விண்ணப்பக் கட்டணமாக 50 ரூபாயை, பணம் அனுப்பும் மொபைல் போன் செயலி வாயிலாக செலுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.