பி.பி.எல்., மீதான திவால் மனு நிராகரித்தது தீர்ப்பாயம்

பி.பி.எல்., நிறுவனத்திற்கு எதிராக 1,323.70 கோடி ரூபாய் நிலுவை தொகை தொடர்பாக, மோர்கன் செக்யூரிட்டீஸ் அண்டு கிரெடிட்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த திவால் மனுவை, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் கொச்சி அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. இந்த கோரிக்கை காலவரம்பை கடந்த பிறகு தாக்கல் செய்யப்பட்டதால், அது சட்டப்படி ஏற்க முடியாதது என்று தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் அமைக்கிறது மிட்சுபிஷி தொழிற்சாலை



ஜப்பானைச் சேர்ந்த மிட்சுபிஷி நிறுவனம், மேற்கு வங்கத்தில் செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக, அம்மாநில தொழில் துறை அமைச்சர் தபஸ் ராய் தெரிவித்துள்ளார். நாட்டின் கிழக்கு மண்டலத்தின் முதலீட்டு மையமாக மேற்கு வங்கம் மாற்றப்படும் என்று கூறிய அவர், 'மிட்சுபிஷி போன்ற பன்னாட்டு பெருநிறுவனங்கள், தங்கள் தொழிற்சாலையை மேற்கு வங்கத்தில் அமைக்க அனைத்து வசதிகளையும், உதவிகளையும் மாநில அரசு செய்யும்' என்றார்.

Advertisement