முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்; புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்
சென்னை: சட்டசபை தேர்தலுக்குப் பிறகு முதல்மறையாக முதல்வர் விஜய் நாளை கரூர் செல்கிறார். அங்கு 13,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தவெக தலைவர் விஜய், முதல்வரான பிறகு முதன் முறையாக நாளை கரூர் செல்ல உள்ளார். கலெக்டர் அலுவலகத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.
அதன்பிறகு, மனவாசி ஊராட்சியில் ரூ.1,700 கோடியில் தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் தனியாரின் எவர்கிரீன் கோதாரி காலணி தயாரிப்பு நிறுவனத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த தொழிற்சாலையின் மூலம் சுமார் 13,500 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.
தொடர்ந்து, வெண்ணெய்மலையில் உள்ள, தனியாருக்கு சொந்தமான, 'அட்லஸ்' கலையரங்க வளாகத்தில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில், கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 32 பேருக்கு, கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் நாளை வழங்க உள்ளார்.
முதல்வர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 5,000 பேர் அமரும் வகையில், பிரமாண்ட கூடாரம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நாளை தமிழக முதல்வர் விஜய் கரூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருவதையொட்டி, பிரமாண்ட பேனர்கள் ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ளன.
@block_Y@
முறையீடு
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் முடிவுக்கு எதிராக மதுரையைச் சேர்ந்த நபர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டுள்ளார். இதனை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதிகள், அரசுப்பணி வழங்கப்படுவது விதிகளுக்கு எதிரானது எனில், அதனை மனுவாக தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினர்block_Y
இதே மாதம் ஜீலை-16.2004 கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் ஏன் இறக்கிறோம் என்பது தெரியாமலேயே உயிருடன் கருகி மாண்ட அந்த 94 பிஞ்சு மலர்கள் ஏனோ இந் நேரத்தில் ஞாபகத்திற்கு வருகிறது. நினைத்தவுடன் நெஞ்சம் ரணமாகி கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.
Will it be a reels factory
சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கே அரசு வேலை கொடுக்கவில்லை. ஒரு நடிகரை பார்க்க ரசிகர்கள் ரசிகைகள் கூடி, கூட்ட நெரிசலில் ஏற்பட்ட இறப்புக்கு எந்த கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குகிறது? நடிகர் இறந்தால் அரசு மரியாதையுடன் அடக்கம். வெளி மாநில சினிமா தயாரிப்பாளர் தமிழக அரசின் டில்லி பிரதிநிதி சினிமா ரசிகர் மன்ற தலைவர்கள், காமெடி நடிகர்கள் MLA க்கள், அமைச்சர்கள். தமிழ்நாடு அரசு சினிமா அரசு ஆகிவிட்டது. என்னை போன்றவர்களை 1990 BE passed பெற்றோர்களும் ஆசிரியர்களும் அந்த காலத்தில் சினிமா பாட்டு பாடினால் அடித்தார்கள் சினிமாவுக்கு சென்றால் அடித்தார்கள்.சினிமா ரசிகர் மன்ற உறுப்பினர் என்றால் கட்டிவைத்து அடிப்பார்கள். அப்படி இருக்கும்போது மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று விரும்புகிற என்னைப்போன்றவர்கள் எப்போது MLA அமைச்சர் ஆவது? இன்ஜினியரிங், மருத்துவம் சட்டம் பொருளாதாரம் அறிவியல் அரசியல் பட்டம் படித்தவர்கள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து ஒரு கட்சி தமிழ்நாடு முன்னேற்ற குழு கழகம் வேண்டாம் என்ற ஒரு கட்சியை துவங்கி மக்களுக்கு சினிமாத்தனம் இல்லாத, ஊழல் இல்லாத, லஞ்சம் லாவண்யம், கமிஷன், கலெக்சன், கரப்ஷன் இல்லாத தூய ஆட்சி கொடுக்கவேண்டும். அது நடக்குமா?
கரூர் தியாகிகளை போற்றும் வகையில் அவர்களின் நினைவாக மணிமண்டபம் அமைக்க உடனடி திட்டம் ஏதேனும் உண்டா முதல்வர் அவர்களே?
ஆனந்தமே உனக்கும் சேர்த்து மணி மண்டபம் உண்டு...waiting...
நினைவு மண்டபம் மட்டும் போதாது...? சிலைகள் அமைத்திட வேண்டும், அத்துடன்... அவர்கள் மறைந்த தினத்தை “நினைவு தினமாக” நாடே கொண்டாட வேண்டும் விடுமுறையுடன்...?
கரூரில் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை தருவதாக செய்தி வந்துள்ளது.
இறந்தவர்கள் அப்பாவிகள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவர்கள் நாட்டுக்காக தியாகம் செய்தா இறந்தார்கள்? யாரோட அப்பன் வீட்டு காசுல இருந்து அவர்களுக்கு வேலை தருகிறாய் முதல்வர் அவர்களே? வேண்டும் என்றால் உன்னோட சொந்த பணத்தில் சம்பளம் கொடுத்து உன்னோட வீட்டுல வேலைக்கு வெச்சிக்கோ. கோமாளித்தனமான நிர்வாகம் நடக்கிறது.
நல்லது. வாழ்த்துக்கள். அப்படியே 2003 ல் பணியமர்த்தபட்டு ஓய்வுபெற்று எந்த வருமானமும் இல்லாத சுமார் 6000 அரசு ஊழியர்களுக்கும் கருணை கிடைக்குமா. கிடைத்தால் உளமார வாழ்த்துக்கள். தவெக அரசு தொடர்ந்து 20 ஆண்டுகள் செயல்பட கடவுள் உதவி செய்வார்
TTR கிட்ட சுட்ட coat எங்க
ஏதோ தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழானு சொல்றீங்க. மறக்காம அந்த துறை மந்திரி நம்ம துரை அம்மணிய கூப்பிட்டு போங்க. அந்த அம்மாவுக்கும் அவுங்களோட துறையை ஞாபகப் படுத்துன மாதிரியும் இருக்கும்..
இறந்தவர்கள் என்ன ஜாலியன் வாலாபாக் சம்பவத்தில் குண்டடி பட்டா இறந்தார்கள்? இல்லை கார்கில் சண்டையில் இறந்தவர்களின் வாரிசுகளா?உங்களைப் பார்க்க வந்து இறந்தவர்களுக்கு உங்களது கைக் காசு அல்லது கட்சியின் நிதியில் இருந்து கருணைத் தொகை அளியுங்கள். அதுவும் இல்லை அரசு கட்டாயம் எதுவும் செய்து தான் தர வேண்டும் என்றால் நீங்களே ஒரு அரசாணை வெளியிட்டு குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி, இரண்டு கோடி நிதி உதவி அளியுங்கள். அதை விட்டு, விட்டு போட்டித் தேர்வுக்காக கஷ்டப்பட்டு, இரவு பகலாக படிக்கும் அடுத்த மாணவர்களின் வேலை வாய்ப்பை தட்டிப் பறித்து அவர்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ளாதீர்கள்.அவர்களுக்காக உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையில் தயவு செய்து கை வைக்காதீர்கள்.
தவறு. உங்கள் கட்சி நிதியில் இருந்து பெருந்தொகையை வங்கியில் டெபாசிட் செய்யலாம். அதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரம் பெறுவர். அரசியல் கட்சி கூட்டங்களில் இறந்தால் அரசு வேலை கொடுப்பது ஏற்க்க முடியாது. தவரான முன் உதாரணமாகும்.மேலும்
-
பிடதி டவுன்ஷிப் திட்ட வரைபடத்தின் மீது ரத்தம் தெளித்து விவசாயிகள் போராட்டம்
-
தேர்தலுக்கு முன் கோரிக்கை விடுத்த குடும்பத்திற்கு குடியிருப்பு ஒதுக்கீடு
-
'தனி பஸ் விடுங்க விஜய் மாமா' : முதல்வருக்கு மாணவர் கடிதம்
-
நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றுவது நிற்காது அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா திட்டவட்டம்
-
மணல் நிறுவனத்திடம் கார் வாங்கினேனா? மறுக்கிறார் ராதாபுரம் த.வெ.க., -- எம்.எல்.ஏ.,
-
மக்களை தேடி செல்லும் அரசாக நாம் இருக்க வேண்டும் அதிகாரிகள் மத்தியில் முதல்வர் சிவகுமார் பேச்சு