பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே பெண்ணைத் தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

சின்னசேலம் அடுத்த தென்தொரசலுார் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் மனைவி ரோஜா, 30; இவரது உறவினர் இடத்தில் அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி பழனியம்மாள், 36; கல் மண் மற்றும் குப்பையை கொட்டி வைத்துள்ளார்

இது குறித்து கேட்ட ரோஜாவை, பழனியம்மாள் உள்ளிட்ட அவரது குடும்பத்தை சேர்ந்த தரணி, தமிழரசன், சரோஜா ஆகியோர் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

ரோஜா கொடுத்த புகாரின் பேரில் பழனியம்மாள் உட்பட 4 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement