ஸ்பெயினில் பயங்கர காட்டுத்தீ; 12 பேர் பரிதாப பலி
நமது நிருபர்
ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
ஸ்பெயினில் தென்கிழக்கு மாகாணமான அல்மேரியாவில் உள்ள லாஸ் கல்லார்டோஸில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆறு பேர் காயம் அடைந்து உள்ளனர். அறுந்து விழுந்த மின்கம்பியால் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அந்தத் தீ அருகிலுள்ள வனப்பகுதிக்கு வேகமாகப் பரவியதாகவும் நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். தீ விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
ஸ்பெயின் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுட்டெரிக்கும் வெப்பநிலைக்கு மத்தியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ஸ்பெயின், அடிக்கடி மற்றும் நீண்ட வெப்ப அலைகளை சந்தித்து வருகிறது. இதில் வெப்பநிலை பெரும்பாலும் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தாண்டுவதால், பெரும் காட்டுத்தீ ஏற்படுவதற்கான சூழல் உருவாகிறது.
மேலும்
-
வீட்டில் விளக்குகள் அமைப்பதில் தவிர்க்க வேண்டிய குறைபாடுகள்!
-
கட்டுமான பொருள் கண்காட்சி; கோலாகல துவக்கம்
-
'கருணாநிதி குடும்ப சொத்துக்களை காப்பாற்ற காவிரி விவகாரத்தில் தி.மு.க., துரோகம்'
-
'மேகதாது அணை கட்டாமல் தடுக்க அரசு நடவடிக்கை'
-
கோவில் நிலங்களை தனியாருக்கு எப்படி பட்டா வழங்க முடியும்? முதல்வர் விளக்கமளிக்க பா.ஜ., வலியுறுத்தல்
-
கடைமடை பகுதி வரை பாசன நீர் விவசாயிகள் வலியுறுத்தல்