இரு நாடுகளின் உணர்வில் கலந்தது கிரிக்கெட்; மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மோடி நெகிழ்ச்சி
நமது நிருபர்
இரு நாடுகளின் உணர்வில் கலந்தது கிரிக்கெட் என ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வீரர்களை சந்தித்த பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீசுடன் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை பார்வையிட்டார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திற்குள் அடியெடுத்து வைப்பது எந்தவொரு இந்தியருக்கும் ஒரே நேரத்தில் இரண்டு உணர்வுகளைத் தூண்டுகிறது. முதலாவது, இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியின் பரவசம். இரண்டாவது, நம் இரு நாடுகளிலும் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது இரு நாடுகளின் உணர்வில் கலந்தது.
இன்று கடைசி ஓவர் வரை போராடி வெல்ல வேண்டும் என்ற அழுத்தம் இல்லை. மாறாக, ஆட்டத்தின் மகிழ்ச்சி, நமது நட்பின் அரவணைப்பு, மற்றும் வருங்கால சாம்பியன்களின் ஆற்றல் மட்டுமே உள்ளது. கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் மற்ற விளையாட்டுகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம். விளையாட்டுப் பயிற்சி, விளையாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் நாம் ஒன்றிணைந்து முன்னேறி, களத்திலும் களத்திற்கு வெளியேயும் நமது உறவை வலுப்படுத்துவோம்.
எனது நண்பர் பிரதமர் அல்பனீஸை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், கிரிக்கெட் எங்களை இணைக்கும் ஒரு இயல்பான புள்ளியாக அமைந்திருக்கிறது. நாங்கள் ஆமதாபாத்தில் உள்ள மைதானத்தை ஒன்றாகப் பார்வையிட்டோம். இன்று இங்கு இருக்கும்போதும், அந்த விளையாட்டு உணர்வை என்னால் உண்மையாகவே உணர முடிகிறது. குறிப்பாக ஸ்டீவ் வாக் மற்றும் லிசா ஸ்தலேகர் போன்ற ஜாம்பவான்கள் நம்மிடையே இருக்கின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
@block_Y@
இந்தியாவில் பிக் பாஷ்
மெல்போர்ன் மைதானத்தை பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அல்பான்ஸூம் பார்வையிட்ட பிறகு, அடுத்த பிக் பாஷ் (big bash) தொடர் இந்தியாவில் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிசம்பர் 12ம் தேதி நடக்கும் முதல் போட்டி சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. block_Y
கிரிக்கெட் ஆத்ம நிர்பார் க்கு எதிரானதாச்சே. அதுக்குபதில் நம்மூரு சடுகுடுவை அங்கு பிரபலப்படுத்தலாமே.மேலும்
-
மஸ்ட் கல் குவாரிக்கு எதிர்ப்பு நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்
-
இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 11 க்குரியது
-
ராமநாதபுரம் ஏரியாவில் சேர்த்து கொள்ளவும் –––––– ராமேஸ்வரம் கோயில் வீதியில் பக்தர்கள் கூடுதல் ஓய்வு கூடம் அமைக்கப்படுமா
-
நிறைகுளத்து அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
-
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு உதவ சிறப்பு கட்டுப்பாட்டு அறை
-
குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ரேஷனில் கைரேகை பதிவு கட்டாயம்