கோவில் விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குட ஊர்வலம்
குளித்தலை:குளித்தலை
அடுத்த பிள்ளப்பாளையம் பஞ்., வீரக்குமாரன்பட்டி கிராமத்தில்
விநாயகர், பகவதி அம்மன், மாரியம்மன், மலையாளி, மருதைவீரன் ஆகிய
தெய்வங்களுக்கு இரண்டாம் ஆண்டு பால்குடம் எடுத்து, பால் அபிஷேகம்
செய்வது என கிராம மக்கள், விழா குழுவினர் முடிவு செய்தனர்.
இதையடுத்து
நேற்று காலை கிராம மக்கள், பக்தர்கள் திம்மாச்சிபுரம் காவிரி ஆற்றில்
இருந்து பால்குடம், தீர்த்தத்குடஙகளை எடுத்து, மேளதாளங்கள் முழங்க
ஊர்வலமாக வந்தனர். சுவாமிகளுக்கு பால் அபிஷேகம் செய்து
தரிசித்தால், அம்மை அப்பனின் உஷ்ணம் தணிந்து, நம் துன்பம் விலகி,
வேண்டிய வரம் கிடைக்கும் என்ற ஐதீகத்தில், பக்தர்கள் பால்குடம் எடுத்து
வந்தனர். இன்று மாலை மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்தல்
நடைபெறுகிறது.
நாளை காலை கிடா வெட்டுதல், மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து 14 நாடுகள் கூட்டறிக்கை
-
உத்தரகாண்டில் கனமழை. நிலச்சரிவுகளால் 69 சாலைகள் மூடல்!
-
தடுப்பு இல்லாத சாலை வளைவு விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
-
எட்டு பெட்டிகளுடன் மெமு ரயில்கள் இயக்கம்
-
ஆரியபெரும்பாக்கம் சுடுகாடு தகன மேடை சேதம்
-
நிஜ்ஜார் படுகொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் நாடு கடத்தலா?
Advertisement
Advertisement