தடுப்பு இல்லாத சாலை வளைவு விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
காஞ்சிபுரம், ஜூலை 13–
ஏரிவாக்கம் – கோயம்பாக்கம் சாலை வளைவில் தடுப்பு இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டை ஏரிவாக்கம் கிராமத்தில் இருந்து, அஞ்சூர் வழியாக கோயம்பாக்கம் கிராமத்திற்கு செல்லும், 4 கி.மீ., துாரம் கிராம சாலை உள்ளது.
இந்த சாலையில், ஆறு இடங்களில் அபாயகரமான வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில், கிராமப்புற வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இதில், கோயம்பாக்கம் கிராமம் அருகே இருக்கும் சாலை வளைவில் ஆபத்தான நிலை உள்ளது.
குறிப்பாக, ஏரிவாக்கம் – கோயம்பாக்கம் சாலை வளைவில், வயல்வெளியில் மின் மாற்றி இருப்பதால், அந்த வளைவில் செல்லும் வாகன ஓட்டிகள் செல்லும் போது நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது.
இதனால், முத்தியால்பேட்டை, ஏரிவாய் பகுதியில் இருந்து கோயம்பாக்கம் செல்லும் சாலை வளைவில் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
இறகுப்பந்து போட்டி
-
நலம் ஏ.ஐ., செயலியில் வாட்ஸ்ஆப் எண்ணில்வீட்டில் இருந்தவாறு வெளிநோயாளி சீட்டு பதிவு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அறிமுகம்
-
போலீஸ் செய்திகள்... விபத்தில் முதியவர் பலி
-
ரூ.14 கோடி வங்கி மோசடியில் வழக்குப்பதிய போலீசார் தாமதம்
-
குறுவட்ட கபடிபோட்டி மாணவிர்கள் ஆர்வம்
-
முதல்வர் விஜய் தலைமையில் 16ம் தேதி அமைச்சரவைக் கூட்டம்