ஆரியபெரும்பாக்கம் சுடுகாடு தகன மேடை சேதம்

காஞ்சிபுரம், ஜூலை 13–

ஆரியபெரும்பாக்கம் சுடுகாட்டில், சேதமடைந்த தகன மேடையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் அடுத்த, ஆரியபெரும்பாக்கம் கிராமத்தில் இருந்து, கூரம் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில், ஆரியபெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்களில் யாரேனும் இறக்க நேரிட்டால், புதைத்தும், எரித்தும் வந்தனர்.

இந்த சுடுகாட்டில் உடலை எரிக்கும் தகன மேடை துாண்கள் சேதமடைந்து, கம்பி நீட்டிக் கொண்டிருக்கிறது.

எனவே, ஆரியபெரும்பாக்கம் சுடுகாட்டில், தகன மேடையை சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement