உத்தரகாண்டில் கனமழை. நிலச்சரிவுகளால் 69 சாலைகள் மூடல்!

டேராடூன்: உத்தரகாண்டில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் 69 சாலைகள் மூடப்பட்டு உள்ளன.

உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவுகள் வெள்ளப்பெருக்கு எற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

மழை காரணமாக சேதம் அடைந்த சாலைகள், உள்கட்டமைப்புகளை மாநில பேரிடர் குழுவினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர் நடவடிக்கைகளின் பலனாக, மாநிலம் முழுவதும் உள்ள 202 சாலைகளில் 120 சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. 13 சாலைகளில் பகுதியளவு பயன்பாட்டில் உள்ளது. 69 சாலைகள் முழுமையாக மூடப்பட்டு இருக்கின்றன.

உத்தரகாசி மாவட்டம் சின்யாலிசூரி அருகே மழையின் போது கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. காரில் இருந்த 5 பேர் பலகட்ட போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டனர்.

Advertisement