எட்டு பெட்டிகளுடன் மெமு ரயில்கள் இயக்கம்
சென்னை: தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், சில மெமு ரயில்கள் இன்று, வழக்கமான 12 பெட்டிகளுக்கு பதிலாக 8 பெட்டிகளுடன் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று காலை 9:45 மணிக்கு, தாம்பரத்தில் இருந்து விழுப்புரத்துக்கு புறப்படும் மெமு ரயில்; விழுப்புரத்திலிருந்து இன்று மதியம் 1:30 மணிக்கு சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மெமு ரயில்கள், 8 பெட்டிகளுடன் இயக்கப்படும்.
அதேபோல், இன்று மாலை 6:00 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் திருவண்ணாமலைக்குச் செல்லும் மெமு ரயில்; காலை 4:30 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் மெமு ரயில் ஆகியவையும் 8 பெட்டுகளுடன் இயக்கப்படும் என, ரயில்வே தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement