லஞ்சத்துக்கு எதிரான முதல் அடி: முதல்வர் விஜய் குரலுக்கு உங்கள் ஆதரவை கமென்ட் செய்து சொல்லுங்க!
நமது நிருபர்
''யாரும் லஞ்சம் கேட்டால் தராதீர்கள். யாராவது கேட்டால் இது விஜய் ஆட்சி என்று கூறுங்கள்,'' என்று முதல்வர் விஜய் கரூரில் நேற்று வேண்டுகோள் விடுத்தது, லஞ்சத்தை முற்றிலும் ஒழிப்பதற்கான முதல் அடி. நாட்டின் எதிர்கால நலன் கருதி இத்தகைய குரலுக்கு வலு சேர்க்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.
அரசு அலுவலகங்களில் எங்கும் எதிலும் லஞ்சம் நீக்கமற இருக்கிறது. எந்த ஒரு செயல் அரசு ஊழியரால் ஆக வேண்டும் என்றாலும் பணம் கொடுக்காமல் நடக்காது என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் ஏழை எளியவர்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை, மக்கள் அரசு அலுவலகங்களில் அடையும் துயரங்கள் கொஞ்ச லஞ்சம் இல்லை.
லஞ்சம் வாங்குவதற்காக அலைக்கழிக்க வைப்பது, தராதவர்களை எடுத்தெறிந்து பேசுவது, லஞ்சம் கொடுத்தவர்களுக்காக எல்லா விதிமுறைகளையும் வளைப்பது எல்லாம் அரசு அலுவலகங்களில் வாடிக்கையாக நடந்து வருகிறது. இதற்கு யாராவது தீர்வு காண மாட்டார்களா என்று வேதனையுடன் மக்கள் இருந்த வேளையில் தான், லஞ்சத்துக்கு எதிராக விஜய் தலைமையிலான தவெக அரசு, முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது.
நாட்டில் இதுவரை எந்த முதலமைச்சரும் செய்திடாத ஒரு செயலை நேற்று கரூரில் விஜய் செய்திருக்கிறார்.
யாரேனும் லஞ்சம் கேட்டால் தராதீர்கள். கேட்டால் இது விஜய் அரசு என்று சொல்லுங்கள் என்ற அவரது பேச்சு, லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்ற மனநிலை கொண்டவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அரசு அலுவலகங்கள் எங்கும் புரையோடி போன லஞ்சத்தால் வாடி வதங்கி வேதனைப்பட்டு நிற்கும் மக்களுக்கு ஆறுதலாக முதல்வர் விஜயின் வார்த்தைகள் உள்ளன.
எனவே அவரது குரலுக்கு வலு சேர்க்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.
லஞ்சம் தராமலும், லஞ்சத்துக்கு எதிராக போராடுபவர்களை ஊக்குவிக்க வேண்டியதும் நம் ஒவ்வொருவரின் பணி.
கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!
இது பற்றிய உங்கள் கருத்து என்ன? முதல்வர் விஜய் நேற்று கரூரில் நிகழ்த்திய லஞ்சத்துக்கு எதிரான உரை பற்றி உங்கள் கருத்தை கமென்ட் செய்து சொல்லுங்கள் வாசகர்களே!
NO CORRUPTION, NO Govt department will work. everyone asks for bribe. If you are not willing to bribe, still you can submit your papers, but it will never move from one to other . To stop the corruption, only way is strictly enacting the existing laws against the corrupt people. No necessity to amend any law. Time frame should be in place, for every application, submitted. It shouldnt run to few months. Everything should be automated, something like automation in IT department for ITR submission. or like getting the Passport as on today. The brokers in every office should be eliminated. Automate the registrar office. Every check should be by the machines and not by any individual. Try it out in few departments and then extend to other departments.
வாழ்க விஜய் வெற்றி
புழல் சிறைச்சாலையே நிரம்பி வழியும் அளவுக்கு தமிழ்நாட்டில் ஊழல் பெருச்சாளிகள் எண்ணிக்கை அபரிமிதமாக உள்ளது. பேசுவதை நிறுத்திவிட்டு அதிரடியாக செயலில் இறங்குவது எப்போது என்பதே தற்போது பொதுமக்களின் எதிர்பார்ப்பு. மேல்மட்ட ஊழலை தயவுதாட்சண்யம் இன்றி ஒடுக்கினால் கீழ்மட்ட ஊழல் தானாகவே காணாமல் போய்விடும்.
Still dmk councillor in coimbatore village is asking 15000 for bore well approval for new houses.
அடுத்த சுவற்றில் போஸ்டர்கள் ஒட்டும் அரசியல்வாதி தன் வீட்டு சுவரை மட்டும் பளபள என்று வைத்திருப்பார்.
இவர் எந்த ரகம் என்று புரிந்து கொள்ள அவகாசம் கேட்டுள்ளார். பத்து மாதங்கள் கழித்து பார்ப்போம் பிறந்தது பிள்ளையா பிசாசா என்று?
முதல்வர் தேர்தலுக்கு முன் பேசியது அப்படியே பேசியதற்க்கு முரணாக நடப்பதால் லஞ்சத்தை அவரால் எப்படி ஒழிக்க முடியும் அப்படி லஞ்சத்தை ஒழித்தால் அது உலகின் 8 வது அதிசயமாகும்
என்னமோ இந்த கருத்தை இதுவரைக்கும் யாருமே சொல்லாதமாதிரி இப்படி ஒரு அலப்பறை. வெறும் பேச்சு அல்ல. செயல்கள்தான் பேசுபவர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும். கடந்த 2 மாதங்களில் ஊழலை ஒழிக்க குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எந்த முன்னெடுப்பும் இல்லை. அவர் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். இவர் ஓடி ஒளிந்து கொண்டு விட்டார் என்கிற சாக்குபோக்கு எந்தவிதமான பலனையும் தராது. சட்டங்களில் உள்ள ஓட்டைகள் நீதித்துறையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஊழல் தடுப்பு இயந்திரத்தில் நிலவும் குறைபாடுகள் போன்றவற்றை சரி செய்ய எந்த விதமான திட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்காதவரை ஊழல் ஒழிப்பு முழக்கம் வெறும் அலங்கார மேடைப் பேச்சாகவே இருக்கும்.
லஞ்சம் யாருக்கும் கொடுக்காதீர்கள் நானே பதவி லஞ்சமாக கொடுத்தால் கண்டு கொள்ளாதீர்கள்
இவரே மறைமுகமாக லஞ்சம் குதிரை பேரம் கொடுத்து தானே இந்த ஆட்சி அமைத்தார். அரசன் எவ்வழியே குடிமக்களும் அவ்வழியே தானே போவார்கள். முந்தைய அரசு பின்பற்றியே இவரும் பயணிக்கிறார். பின்னே என்ன மாற்றம் நிகழ்ந்து விட போகிறது? மாற்றம் என்பது பேச்சில் இல்லை. செயலில் வேண்டும். அண்ணாமலை போன்றோர் வந்தால் தான் சிஸ்டம் உருப்படும்.
உண்மையை சொல்லுங்க தினமலர்... சி.எம்., சொன்னது மாதிரி நடக்க வாய்ப்பிருக்கிறதா? திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது அனைவருக்குமே தெரியும். கள ஆய்வு செய்து பாருங்கள் உண்மை நிலவரம் தெரியும். வக்கீல்கள் நியமனத்தில் பல லட்ச ரூபாய் லட்ச பணம் கைமாறியதாக தகவல்கள் வருகிறது. விஜய் சொன்னதை வேண்டுமென்றால் முன்னெடுப்பாக கொண்டு செல்ல முயலலாம்.