முந்திரி பண்ணைக்கு நடமாடும் வாகனம் வழங்கல் 

விருத்தாசலம்:  விருத்தாசலம் அடுத்த பழையபட்டிணம் கிராமத்தில் உள்ள விருதை முந்திரி உற்பத்தியாளர்கள் சங்க பண்ணைக்கு சந்தைபடுத்துதலை மேம்படுத்த, ரூ.11.71 செலவில் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு, நபார்டு திட்டத்தில் மூலம் ரூ.7.50 லட்சம் மானியத்தில் நடமாடும் வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் தலைமை பொது மேலாளர் மனோஜ் கலந்துகொண்டு, நடமாடும் வாகனத்தை வழங்கி, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை நீடித்த கிராமப்புற நிறுவனங்களாக மாற்றுவதில் ஒருங்கிணைப்பு, மதிப்புக்கூட்டல், வர்த்தக குறியாக்கம் மற்றும் நேரடி சந்தை அணுகல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

நபார்டு மாவட்ட கலெக்டர் சசிகுமார், தேசிய வேளாண் அறக்கட்டளை அதிகாரிகள், இயக்குநர் குழு, பங்குதாரர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர். 

இந்த நடமாடும் வாகனம் பண்ணை வயலில் கொள்முதல் செய்தல், விவசாய உள்ளீடுகளை விநியோகித்தல், விளைபொருட்களை கொண்டு செல்லுதல் மற்றும் நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்தலுக்கு பயன்படுத்தப்படும். இதன்மூலம், கோட்டேரி, முதனை மற்றும் கம்மபுரம் வட்டாரத்தை சேர்ந்த, 10 கிராம விவசாயிகள் பயனடைவர்.

Advertisement