தமிழகத்தில் 20 ஆண்டுகள் விஜய் ஆட்சிதான் புதுச்சேரியில் அமைச்சர் ஆனந்த் பேச்சு
புதுச்சேரி: தமிழகத்தில் 20 ஆண்டுகள் விஜய் ஆட்சி தான் இருக்கும் என, தமிழக அமைச்சர் ஆனந்த் பேசினார்.
புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக அமைச்சர் ஆனந்த் பேசியதாவது:
புதுச்சேரியில் அமலோற்பவம் பள்ளி 42 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. அப்போது, எனது தாய், எங்களது வீட்டை பள்ளிக்காக வழங்கினார். எத்தனையோ கஷ்டங்களை தாண்டி இந்த பள்ளியை தாளாளர் லுார்துசாமி வளர்த்துள்ளார். அவர் எனக்கு 6ம் வகுப்பில் வரலாறு பாடம் எடுத்த ஆசிரியர். இன்று வரை பள்ளியின் விடுதி எனது வீட்டில் தான் செயல்பட்டு வருகிறது. ஏழை மாணவர்கள் பலருக்கு வாய்ப்பளித்து அவர்கள் சமூகத்தில் பெரிய இடத்தில் அமரவைத்துள்ளார். இன்றைக்கும் பலரும் அதை நன்றியோடு நினைவு கூறுகின்றனர்.
நான் இந்த இடத்தில் நிற்க தமிழக முதல்வர் விஜய் தான் காரணம். எனது தொகுதியில் 4 நாட்கள் தான் ஓட்டு சேகரித்தேன். என்னை மக்கள் வெற்றிபெற வைத்துவிட்டனர். இது எனக்கு கிடைத்த ஓட்டு அல்ல விஜய்க்கு மக்கள் அளித்த ஓட்டு. எனது விசுவாசத்தை பற்றி புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பேசினார். ஊழல் இல்லாத இடம் எதுவென கண்டறிந்து தா.வெ.க., விடம் வருகின்றனர். இந்த 5 ஆண்டுகள் மட்டுமல்ல, இன்னும் 20 ஆண்டுகள் தமிழகத்தில் விஜய் ஆட்சி தான் இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து 14 நாடுகள் கூட்டறிக்கை
-
உத்தரகாண்டில் கனமழை. நிலச்சரிவுகளால் 69 சாலைகள் மூடல்!
-
தடுப்பு இல்லாத சாலை வளைவு விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
-
எட்டு பெட்டிகளுடன் மெமு ரயில்கள் இயக்கம்
-
ஆரியபெரும்பாக்கம் சுடுகாடு தகன மேடை சேதம்
-
நிஜ்ஜார் படுகொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் நாடு கடத்தலா?