குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்
குஜிலியம்பாறை, ஜூலை 12--
குஜிலியம்பாறை ஒன்றியம் வாணிக்கரை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடால் அவதியுற்ற பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
இப்பகுதி மக்களுக்கு அங்குள்ள சிற்றோடையில் போர்வெல் அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக போதிய குடிநீர் இன்றி மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இதையடுத்து குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் மூன்று கி.மீ., தொலைவில் உள்ள பாலப்பட்டி அழகாபுரி நால்ரோட்டிற்கு சென்று வேடசந்துார் – கரூர் ரோட்டில் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் கூம்பூர் சிறப்பு எஸ்.ஐ.,க்கள் சுப்பிரமணி, சந்திரசேகர், சரவணன், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் பேசி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
மேலும்
-
சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து 14 நாடுகள் கூட்டறிக்கை
-
உத்தரகாண்டில் கனமழை. நிலச்சரிவுகளால் 69 சாலைகள் மூடல்!
-
தடுப்பு இல்லாத சாலை வளைவு விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
-
எட்டு பெட்டிகளுடன் மெமு ரயில்கள் இயக்கம்
-
ஆரியபெரும்பாக்கம் சுடுகாடு தகன மேடை சேதம்
-
நிஜ்ஜார் படுகொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் நாடு கடத்தலா?