விகாஸ் வித்யாலயா பள்ளியில் மாணவர்களுக்கு வரவேற்பு 

திருப்பூர், ஜூலை 12– 

திருப்பூர், கூலிபாளையம், விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நடப்பு கல்வியாண்டில் புதிதாகச் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு வரவேற்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளியின் பொருளாளர் ராதா ராமசாமி குத்து விளக்கேற்றி வைத்தார்.  புதிய மாணவர்களை வரவேற்று பள்ளி முதல்வர் பேசினார். மாணவர்கள் கற்றல், புத்தாக்கம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி ஆகியவற்றை முன்னெடுத்து அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வாழ்த்து கூறி, கிடைக்கும் வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். விழாவில் இசை, நடனம், நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பள்ளி செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன், துணை செயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement