போலீஸ் செய்திகள்
கஞ்சா விற்றவர் கைதுதேனி: கம்பம் மெட்டு காலனியை சேர்ந்த பாலகுரு 21, இவருடன் 17 வயது சிறுவன் தேனி அன்னஞ்சி விலக்கு அருகே நின்றனர். அவ்வழியாக சென்ற போலீசார் அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் ரூ.6000 மதிப்புள்ள கஞ்சா இருந்தது. பாலகுருவை கைது செய்து அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.மின் வயர் திருட்டுதேனி: மஞ்சிநாயக்கன்பட்டி அருகே சடையால்பட்டியில் முல்லை பெரியாற்றில் உரைகிணறு உள்ளது. இக்கிணற்றில் இருந்து மஞ்சிநாயக்கன்பட்டி மற்றும் கோடாங்கிபட்டி ஊராட்சிகளுக்கு தனித்தனி மோட்டார்கள் மூலம் குடிநீரேற்றப்படுகிறது. மோட்டார் ரூம்களில் இருந்த 100 மீ., மின் வயர் திருடுபோனது. ஊராட்சி செயலாளர் தமிழ்மாறன் 45, புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.மதுவிற்றவர் கைதுதேனி: அய்யனார்புரத்தை சேர்ந்தவர் முத்துகாணி 56. இவர் அப்பகுதியில் மதுவிற்றார். பழனிசெட்டிபட்டி போலீசார் முத்துகாணியை கைது செய்தனர்.
பெண் தொழிலாளி பலி
மூணாறு:கே.டி. எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான மாட்டுபட்டி எஸ்டேட், நெற்றிமேடு டிவிஷனில் தேயிலை தோட்ட தொழிலாளி சரஸ்வதி 53. நேற்று அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் காலை 8:45 மணிக்கு பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடிரென மயங்கி விழுந்தவரை, சக தொழிலாளர்கள் மூணாறில் டாடா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சரஸ்வதியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து 14 நாடுகள் கூட்டறிக்கை
-
உத்தரகாண்டில் கனமழை. நிலச்சரிவுகளால் 69 சாலைகள் மூடல்!
-
தடுப்பு இல்லாத சாலை வளைவு விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
-
எட்டு பெட்டிகளுடன் மெமு ரயில்கள் இயக்கம்
-
ஆரியபெரும்பாக்கம் சுடுகாடு தகன மேடை சேதம்
-
நிஜ்ஜார் படுகொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் நாடு கடத்தலா?