மாநகராட்சியை கண்டித்து வியாபாரிகள் போராட்டம்
கடலுார்: கடலுாரில் தெரு வியாபாரிகள் மாநகராட்சியை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
கடலுார் லாரன்ஸ்ரோட்டில் கடை வைக்க அனுமதியில்லை எனக்கூறி வியாபாரிகளின் பொருட்கள், தள்ளுவண்டிகளை அகற்றிய மாநகராட்சியை கண்டிப்பது; கடலுார் லாரன்ஸ்ரோடு பொருட்கள் விற்பனை செய்யும் பகுதியாக அறிவிக்க வேண்டும்; என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தெரு வியாபார தொழிலாளர் சங்கம் கடை வைக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது.
அதன்படி, சங்க மாநில செயலாளர் குளோப் தலைமையில், காங்., மாநில செயலாளர் சந்திரசேகரன், துணை மேயர் தாமரைச்செல்வன், காங்., மாவட்ட தலைவர் ரங்கமணி, இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் துரை, மா.கம்யூ., மாநகர செயலாளர் அமர்நாத் உள்ளிட்ட பலர் ஆஞ்சநேயர் கோவில் அருகே நேற்று திரண்டு, மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பின், கடை வைக்கும் போராட்டம் நடத்த ஊர்வலமாக புறப்பட்டனர்.
அப்போது, போலீசார் தடுத்து நிறுத்தி, இப்பிரச்னை தொடர்பாக ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காணப்படும் என, உறுதியளித்தனர். இதையடுத்து வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும்
-
சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து 14 நாடுகள் கூட்டறிக்கை
-
உத்தரகாண்டில் கனமழை. நிலச்சரிவுகளால் 69 சாலைகள் மூடல்!
-
தடுப்பு இல்லாத சாலை வளைவு விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
-
எட்டு பெட்டிகளுடன் மெமு ரயில்கள் இயக்கம்
-
ஆரியபெரும்பாக்கம் சுடுகாடு தகன மேடை சேதம்
-
நிஜ்ஜார் படுகொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் நாடு கடத்தலா?