இடிந்து விழும் டூவீலர் ஸ்டாண்ட் அலுவலர்கள் அச்சம்
சிவகங்கை,ஜூலை 13-–
சிவகங்கை மாவட்ட கருவூலம் எதிரே உள்ள டூவீலர் ஸ்டாண்ட் கூரை அடிக்கடி கான்கிரீட் பெயர்ந்து விழுவதால் வாகனங்களை நிறுத்த அரசு அலுவலர்கள் அச்சப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை கலெக்டர் அலுவலகம் கட்டடம் கட்டி 30 ஆண்டுகள் ஆகிறது. இந்த வளாகத்தில் எஸ்.பி., அலுவலகம், பொதுபணித்துறை அலுவலகம், பள்ளிகல்வி துறை, மாவட்ட கருவூலம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு ஒருங்கிணைந்து கட்டப்பட்டுள்ளது. அப்போது கட்டடம் கட்டுகையில் ஒவ்வொரு அலுவலகத்திற்கு எதிராகவும் டூவீலர் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்கு வாகனம் நிறுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடங்களும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டடங்களும் முழுவதும் சேதம் அடைந்ததுள்ளது. மாவட்ட பள்ளி கல்வித்துறை அலுவலக கட்டடத்தின் பின்பகுதி முழுவதும் சேதமடைந்துள்ளது. அதேபோல் எதிரே உள்ள டூவீலர் ஸ்டாண்ட், மாவட்ட கருவூலம் எதிரே உள்ள டூவீலர் ஸடாண்ட் கான்கிரிட்கள் பெயர்ந்து அடிக்கடி திடீர் திடீரென்று விழுவதால் அரசு அலுவலர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்த அச்சப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் சேதமடைந்துள்ள டூவீலர் ஸ்டாண்டையும் அரசு கட்டடங்களையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து 14 நாடுகள் கூட்டறிக்கை
-
உத்தரகாண்டில் கனமழை. நிலச்சரிவுகளால் 69 சாலைகள் மூடல்!
-
தடுப்பு இல்லாத சாலை வளைவு விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
-
எட்டு பெட்டிகளுடன் மெமு ரயில்கள் இயக்கம்
-
ஆரியபெரும்பாக்கம் சுடுகாடு தகன மேடை சேதம்
-
நிஜ்ஜார் படுகொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் நாடு கடத்தலா?