நுார்முகம்மது அவுலியா தர்கா உரூஸ் பண்டிகை துவக்கம்

பண்ருட்டி: பண்ருட்டியில் அவுலியா தர்கா உரூஸ் பண்டிகை துவக்க விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி காந்தி ரோட்டில் உள்ள ஹஜ்ரத் நுார் முஹமது அவுலியா தர்காவில் கந்துாரி உரூஸ் விழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதையொட்டி வெகு விமரிசையாக பேண்டு மற்றும் பல வாணவேடிக்கையுடன் குதிரையில் பல்லக்கில் கொடி ஊர்வலம் வந்து இரவு கொடியேற்றம் நடந்தது.

நேற்று மாலை மவுலுாத் ஷரீப் ஒதி சீரணி வழங்குதல், இன்று மாலை அவுலியா பீடத்தை பூவணி போர்வையால் அலங்கரித்தல், இரவு 8:00 மணிக்கு குத்துஸ் மற்றும் அக்சியாபானு இஸ்லாமிய இன்னிசை கச்சேரி, இரவு 12:00 மணிக்கு சமாதிக்கு சந்தனம் அணிவித்து சந்தன கலசம் கூண்டில் ஏற்றப்பட்டு, பேண்டு வாத்தியம் முழங்க வான வேடிக்கையுடன் சந்தன கூடு ஊர்வலம் வருதல் நடக்கிறது.

நாளை மாலை விளக்கு பண்டிகையையொட்டி, இஸ்லாமியர்கள் தர்காவில் விளக்கு ஏற்றி வழிபடுதல், முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரித்தல், இரவு 8:00 மணிக்கு காவியாவின் தமிழ் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி, வரும் 15 ம்தேதி தர்காவில் குர்ஆன் ஓதுதல், இரவு 8:00 மணிக்கு கர்நாடக காதர்நாசா, சிம்ரன்தாஜ் இஸ்லாமிய கவாலி போட்டி நடக்கிறது.

வரும் 16 ம்தேதி இரவு 8:00 மணிக்கு தாஜீதீன்பைஜி மற்றும் பரிதாஇக்பால் மற்றும் 18 ம்தேதி மாலை 5:00 மணிக்கு கொடி இறக்குதல் நடக்கிறது.

Advertisement