கோவில் குளம் துார் வாரும் பணி துவக்கம்
நடுவீரப்பட்டு: மலையாண்டவர் கோவில் அடிவாரத்தில் உள்ள பெரியகுளம் துார்வாரும் பணி துவங்கியது.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தில் மலையாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் அடிவாரத்தில் இரண்டு குளங்கள் உள்ளன.
இதில் பெரியகுளம் கச்சிராயர்குப்பம், புத்திரன்குப்பம் பகுதியை சேர்ந்தவர்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கிறது.
இந்த குளம் பல ஆண்டுகளாக துார்வாரி புனரமைப்பு செய்யாமல் இருந்தது.
குளம் செடிகளால் மூடப்பட்டிருந்ததால், பொதுமக்கள் துார் வார கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், குளம் துார்வாரும் பணி நேற்று துவங்கி நடந்து வருகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement