'கொடை'யில் துவங்கியது கொட்டாம் பழ சீசன்

கொடைக்கானல்: ஜூலை 16--: கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் கொட்டாம் பழம் சீசன் துவங்கியுள்ளது.

சுற்றுலா தலமான கொடைக்கானலில் பழங்கள் உற்பத்திக்கு பஞ்சமில்லை. அடர்ந்த சோலை வனங்களில் கொட்டாம் பழம் மரங்கள் ஏராளமாக உள்ளன. மருத்துவ குணம் நிறைந்த இப்பழம் புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு நிறைந்தது.

நோய் எதிர்ப்பு சக்தி, ஜீரண பிரச்னை, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் சரி செய்யும் ஆற்றல் மிகுந்தது.

ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் சீசன் துவங்கி ஆகஸ்டில் நிறைவடையும். பறவை, அணில் உள்ளிட்டவற்றின் உணவாக உள்ளது. விற்பனைக்கு வராத இப்பழங்கள் மலைவாழ் மக்கள் மூலம் மலைப்பகுதியில் புழக்கத்தில் உள்ளது.

Advertisement