நல்லாறு துார்வாரும் பணிகள் துவங்கியது
அவிநாசி: அவிநாசி அருகே அணைப்புதுாரில் நல்லாறு பாதுகாப்பு இயக்கம் சார்பில், அனைத்து ரோட்டரி சங்கங்கள், டீசா சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து நல்லாற்றை துார்வாரும் நிகழ்ச்சி துவக்க விழா நடந்தது.
ரோட்டரி மாவட்ட கவர்னர் பூபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று திட்டத்தை துவக்கிவைத்தார்.
இதில் நீர்நிலைகளை பாதுகாத்து மழைநீர் சேமிப்பை அதிகரிப்பதுடன் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில் குளம் காக்கும் இயக்கம் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் கலந்து கொண்டனர்.
திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனர் பாலமுருகன், நல்லாறு பாதுகாப்பு இயக்கம் தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் அருணாசலம், நிர்வாகி பாலசுப்பிரமணியம், ரிதன்யா அறக்கட்டளை நிறுவனர் அண்ணாதுரை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், நகராட்சி கவுன்சிலர்கள் சுப்பிரமணியம் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
பெண்கள் பள்ளி இல்லாத திருப்பாசேத்தி
-
வேம்பத்துாரில் முறிந்த மின்கம்பம் அச்சத்தில் பொது மக்கள்
-
திருப்புத்துாரில் ஆவின் பால் தட்டுப்பாடு
-
காசியை மாற்றியமைக்க கங்கை, வருணா வழித்தடங்கள்; ரூ.25,000 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்
-
அமெரிக்க ரிசர்வ் வங்கி பொருளாதார கண்காணிப்பு குழுவில் இந்தியர்கள் மூவர்!
-
பழநி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை பத்திரப்பதிவு செய்து மோசடி; சிபிசிஐடி விசாரணை தீவிரம்