தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்

1

சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும் என்பதால், 'ஆரஞ்சு அலர்ட்' நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக கடலோர பகுதிகள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்றும் நாளையும் இயல்பான வெப்ப நிலையை விட, 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும். அதனால், உடல்நலம் சார்ந்த அசவுகரியம் ஏற்படக்கூடும். இன்று, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலுார், பெரம்பலுார், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்.

நாளை, விருதுநகர், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழைக்கும், நாளை மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, வடமேற்கு வங்க கடலில், ஒடிஷா - மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement