பணியாற்றுவோருக்கு பதவி உயர்வு இல்லை; வழக்குகளால் தொல்லியல் துறை முடக்கம்
- நமது நிருபர் -
காலி பணியிடங்களை நிரப்ப முடியாமலும், உதவி தொல்லியல் கண்காணிப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க முடியாமலும், பல்வேறு வழக்குகளால் மத்திய தொல்லியல் துறை முடங்கியுள்ளது.
மத்திய தொல்லியல் துறையில், 'குரூப் ஏ' அந்தஸ்தில் உதவி தொல்லியல் கண்காணிப்பாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள், களப்பணி மற்றும் நிர்வாகத்தை இணைக்கும் முக்கிய பொறுப்பில் உள்ளனர்.
உச்ச வயது வரம்பு
இவர்கள், ஒவ்வொரு தொல்லியல் வட்டத்திலும் அகழாய்வுகளை நடத்துவது, நினைவுச் சின்னங்களை பராமரிப்பது, பழமையான கோவில்கள், கோட்டைகள், கல்வெட்டுகளை நேரில் ஆய்வு செய்து, அவற்றை சிதையாமல் பாதுகாப்பது உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர்.
உதவி தொல்லியல் கண்காணிப்பாளர்களுக்கு, காலி இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஐந்தாண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்களுக்கு, யு.பி.எஸ்.சி., தேர்வின் வாயிலாக துணை தொல்லியல் கண்காணிப்பாளர் பதவி வழங்கப்படுகிறது.
காலி பணியிடங்களில் யு.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வில், மூன்றில் ஒரு பங்கு, பணியில் உள்ளவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது; மற்ற பணியிடங்கள், நேரடி நியமனத்தின் வாயிலாக நிரப்பப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த 2024ல், 67 துணை தொல்லியல் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. அதில், உதவி தொல்லியல் கண்காணிப்பாளர்கள் யாரும் தேர்வு செய்யப்படவில்லை. ஏனெனில், அவர்கள் அனைவரும் உச்ச வயது வரம்பை கடந்து விட்ட னர்.
இதை எதிர்த்து, உதவி தொல்லியல் கண்காணிப்பாளர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதன் காரணமாக, யு.பி.எஸ்.சி., தேர்வு நடைமுறை, பதவி உயர்வுகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், துறையில் பல்வேறு பதவிகளுக்கு, காலியாக உள்ள 2,646 பணியிடங்களையும் நிரப்ப முடியவில்லை. இதனால், துறையின் அனைத்து பணிகளும், ஆள் பற்றாக்குறையால் முடங்கி உள்ளன.
தோல்வி
இது குறித்து, மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது: மத்திய தொல்லியல் துறையில் பணியாற்றுவோருக்கு, பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அவர்கள், அந்த தேர்வுகளில் தோல்வி அடைந்ததால், அதிகபட்ச வயது வரம்பை கடந்து விட்டனர்.
தே ர்வில் வெற்றி பெற்றோர், அடுத்த நிலைக்கு சென்று விட்டனர். இந் நிலையில், தேர்வின் வாயிலாக, நேரடி நியமனம் செய்வதை எதிர்த்து வருகின்றனர். இந்த வாரத்துக்குள், இது தொடர்பான அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். வழக்குகளில் தீர்ப்பு வந்ததும், காலியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
பெண்கள் பள்ளி இல்லாத திருப்பாசேத்தி
-
வேம்பத்துாரில் முறிந்த மின்கம்பம் அச்சத்தில் பொது மக்கள்
-
திருப்புத்துாரில் ஆவின் பால் தட்டுப்பாடு
-
காசியை மாற்றியமைக்க கங்கை, வருணா வழித்தடங்கள்; ரூ.25,000 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்
-
அமெரிக்க ரிசர்வ் வங்கி பொருளாதார கண்காணிப்பு குழுவில் இந்தியர்கள் மூவர்!
-
பழநி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை பத்திரப்பதிவு செய்து மோசடி; சிபிசிஐடி விசாரணை தீவிரம்