தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியதால்...

திண்டுக்கல்: வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியதால் திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதி மக்கள் கிழக்கு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி மேற்கு மரியநாதபுரம் பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியுள்ளதாக வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் நேற்று திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகத்தில் திரண்டனர்.

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார் பானுலட்சுமி அரசு நிலத்தில் வீடு கட்டி இருப்பதால் அவற்றை காலி செய்ய வேண்டும்.

அதற்கு பதிலாக வேறு இடத்தில் குடியேற ஏற்பாடு செய்து தரப்படும் என்றார்.

அதற்கு பொதுமக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அந்த இடத்தில் வசித்து வருவதால் அங்கேயே தொடர்ந்து வசிக்க அனுமதிக்க வேண்டும் என்றனர். உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதியளித்தார். தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement