வரும் 30, 31ல் கரூரில் ஜவுளி தொழில் வாங்குவோர், விற்போர் சந்திப்பு; வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கலாம்

சென்னை: தமிழகத்தில் ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க கரூரில் வரும், 30, 31ம் தேதிகளில் வாங்குவோர், விற்போர் சந்திப்பு நிகழ்ச்சியை தமிழக அரசின் பேம்.டி.என்., நிறுவனம் நடத்துகிறது.

இதில் மொரீஷியஸ், பிரான்ஸ், கானா உள்ளிட்ட பத்து நாடுகளை சேர்ந்த, 25 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. அந்நிறுவனங்கள், தங்கள் நாட்டு மக்கள் எந்த வண்ணங்கள், வடிவங்களில் ஜவுளியை விரும்புகின்றனர், சந்தை வாய்ப்பு உள்ளிட்ட விபரங்களை, தமிழக நிறுவனங்களுக்கு தெரிவிக்க உள்ளன.

அதற்கு ஏற்ப அந்நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, வெளிநாடுகளுக்கு, தமிழக நிறுவனங்கள் ஜவுளியை உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்யலாம். இதில் பங்கேற்க விரும்பும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பதிவு உள்ளிட்ட கூடுதல் விபரங்களை, 044 -29530112, 044-29530113 ஆகிய தொலைபேசி எண்களில் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

விபரம் அறிய, 044 29530112, 044 29530113

Advertisement