ஜவுளி உற்பத்தியை விரைவுபடுத்த ரூ.21,000 கோடிக்கு மெஷின் இறக்குமதி; ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரிப்பு காரணம்

திருப்பூர்: இந்தியாவில், ஐந்து ஆண்டுகளில், 21,220 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

நம்நாட்டில் இருந்து ஆடை, வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதிய ஆர்டர் வரத்து அதிகரிப்பதால், உற்பத்தியை விரைந்து முடிக்க, அதிநவீன இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

கடந்த 2021 - 22ம் நிதியாண்டு துவங்கி, 2025 - 26ம் ஆண்டு வரை ஐந்தாண்டில், இந்தியாவின் புதுவகை இயந்திர இறக்குமதி அதிகரித்துள்ளது. ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், சீனா, தைவான் போன்ற நாடுகளில் இருந்து, ஐந்து ஆண்டுகளில், 21,220 கோடி ரூபாய்க்கு, ஜவுளி துறையில் இயந்திர இறக்குமதி நடந்துள்ளது; திருப்பூர் 'கிளஸ்டர்' மட்டும், 4,740 கோடி ரூபாய்க்கு இயந்திர இறக்குமதி செய்துள்ளதாக, புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இயந்திர இறக்குமதியால், அன்னிய செலாவணி கையிருப்பு குறைவதையும் மத்திய அரசு கருத்தில் கொண்டு, ஐ.ஐ.டி., வாயிலாக, அரசு மானியத்துடன், தொழில்நுட்பத்தை மேம்படுத்த திட்டமிட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, ஜவுளி பொறியாளர் மற்றும் தொழில்துறை சுற்றுச் சூழல் நிபுணர் வெங்கட் கூறுகையில், ''ஜவுளி தொழிற்சாலைகளில் பயன்பாட்டில் உள்ள இயந்திரங்களின் பட்டியல் பராமரிப்பை கட்டாயமாக்க வேண்டும். தேவையான நிறுவனங்களுக்கு, முதலீட்டு மானியம், மின்சார கட்டண சலுகை வழங்கலாம்,'' என்றார்.

@block_B@

இந்திய ஜவுளி இயந்திர இறக்குமதி

(ரூ./கோடியில்) 2021 - 22 3,450 2022 - 23 4,120 2023 - 24 4,380 2024 - 25 4,520 2025 - 26 4,750block_B

Advertisement