பழநி, பொள்ளாச்சி வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு: திருச்சி வழித்தடத்திலும் ரயில் சேவைக்கு வலியுறுத்தல்
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கோயம்புத்துார் அகல ரயில் பாதையில் கூடுதல் ரயில்களை இயக்கி பயணிகளின் நலனில் அக்கறை காட்ட ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல்- கோயம்புத்துார் மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகலப்பாதையாக மாற்றும் பணி 2009ல் தொடங்கியது. அதற்கு முன் இப்பாதையில் ராமேஸ்வரம்- கோயம்புத்துார், துாத்துக்குடி -கோயம்புத்துார், மதுரை -கோயம்புத்துார் இன்டர்சிட்டி, திண்டுக்கல்- கோயம்புத்துார், திண்டுக்கல் பழநி ரயில்கள் உட்பட கேரளாவில் இருந்தும் சில ரயில்கள் இயக்கப்பட்டன. கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள் என ஆயிரக்கணக்கானோருக்கு இந்த ரயில்கள் பயனுள்ளதாக இருந்தன.
இதையடுத்து அகலப்பாதை பணிக்காக இந்த ரயில்கள் 2009ல் நிறுத்தப்பட்டன. பணிகள் முடிவுற்று முதல் கட்டமாக 2012 நவம்பரில் திண்டுக்கல் பழநி இடையே ரயில் போக்குவரத்து தொடங்கியது. தொடர்ந்து 2014ல் பழநி பொள்ளாச்சி ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டது. இறுதியாக பொள்ளாச்சி- போத்தனுார் மீட்டர் கேஜ் பாதை அகலப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு 2017ல் போக்குவரத்து தொடங்கியது.
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான மக்கள் கோயம்புத்துாருக்கு கல்வி, வேலை, பிற அலுவல் பணிக்காக சென்று வந்தனர்.
தற்போது திண்டுக்கல்லில் இருந்து கோயம்புத்துார் மார்க்கத்திற்கு பகலில் ஒரு ரயிலும் பாலக்காடு மார்க்கத்தில் 3 ரயில்களும் தினசரி இயக்கப்படுகின்றன. இதை தவிர சில வாராந்திர ரயில்களும் இயக்கப்படுகின்றன.
ஆனால் பழநி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணத்திற்கு தினசரி ரயில்கள் எதுவும் கிடையாது. இந்த வழித்தடத்தில் சென்னை சென்ட்ரலுக்கு அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கரூர், நாமக்கல், சேலம் வழியாக செல்வதால் பயண நேரம் அதிகமாக உள்ளது. பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்தாலும் கன்பார்ம் ஆவதில்லை.
எனவே பழநியில் இருந்து ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும். பழநி வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் எக்ஸ்பிரஸ்களாக இருப்பதால் டிக்கெட் கட்டணம் அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மதுரை, கோயம்புத்துார், திருச்சிக்கு பயணிகள் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
---
நீண்டகால கோரிக்கை நிறைவேறுமா மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது திண்டுக்கல் கோயம்புத்துார் பயணிகள் ரயில் அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் நின்று சென்றதால் பயனுள்ளதாக இருந்தது. இந்த பயணிகள் ரயிலையும் நிறுத்தப்பட்ட மற்ற ரயில்களையும் இயக்க வேண்டும். அகலப்பாதையாக மாற்றிய பின் பழநியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட ரயில் படிப்படியாக பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டதால் இப்பகுதி மக்களுக்கு ரயிலில் இடம் கிடைப்பது சிரமமாக உள்ளது.
எனவே பழநியில் இருந்து திருச்சி, அரியலுார் வழியாக சென்னை எழும்பூர், பழநியில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளுக்கு ரயில்கள் இயக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.
- -சுரேஷ்குமார், முன்னாள் ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர், ஒட்டன்சத்திரம்.
மேலும்
-
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு
-
ஈரானில் மருத்துவமனை அருகே அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்; தொடரும் பதற்றம்
-
லஞ்ச ஊழல் புகார் எதிரொலி; சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட்
-
உ.பி., பல்கலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட 38 கட்டடங்களை இடிக்க உத்தரவு
-
ஜவுளி உற்பத்தியை விரைவுபடுத்த ரூ.21,000 கோடிக்கு மெஷின் இறக்குமதி; ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரிப்பு காரணம்
-
வரும் 30, 31ல் கரூரில் ஜவுளி தொழில் வாங்குவோர், விற்போர் சந்திப்பு; வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கலாம்