ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டக்கிளை தலைவர் தென்னகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

துணை பி.டி.ஓ.,க்கள் இளையராஜா, வேடியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தணிக்கையாளர் கார்த்திக் செல்வம் பேசினார். திட்ட இயக்குனர், இணை இயக்குநர், உதவி இயக்குனர் நிலை-களில் உள்ள காலிபணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியு-றுத்தப்பட்டது. இதே போன்று கடத்துார் ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.*தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, நடந்த ஆர்ப்பாட்டத்-திற்கு வட்ட செயலாளர் தங்கதுரை தலைமை வகித்தார். சங்-கத்தின் மாநில துணைத்தலைவர் இளங்குமரன், மாவட்ட தலைவர் முகமது இலியாஸ் உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

Advertisement