மக்கள் குறைதீர் முகாம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், பொதுமக்களின் புகார் மற்றும் குறைகள் குறித்த மனுக்கள் மீதான குறைதீர் முகாம், தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புதன்கிழமைகளில் நடக்கிறது.

நேற்று, மாவட்ட எஸ்.பி., அருண் கபிலன் தலைமையில், நடந்த முகாமில், ஏற்கனவே பெறப்பட்ட, 99 மனுக்களில், 91 மனுக்க-ளுக்கு தீர்வு காணப்பட்டது. புதிதாக, 49 மனுக்கள் பெறப்பட்-டன. இதில், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் பொது-மக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement