டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட 40 பேர் கைது

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த இருதுக்-கோட்டை அருகே, சம்மந்தகோட்டை மற்றும் போகசந்திரம் கிரா-மங்களுக்கு செல்லும் சாலையோரம், டாஸ்மாக் கடை இயங்குகி-றது. இதனால், இருதுக்கோட்டை மற்றும் தேன்கனிக்கோட்டை அரசு பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் பாதிக்கப்பட்டனர். இருதுக்-கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியிலிருந்து, 350 மீட்டர் துாரத்தில் டாஸ்மாக் கடை உள்ளதால், பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, கடந்த மே, 25ம் தேதி போராட்டம் நடந்தது. 45 நாட்கள் அவகாசம் கேட்டு அது முடிந்த நிலையில், சம்மந்தகோட்டை, போகசந்திரம் கிராம மக்கள், மாணவ, மாணவியர், நேற்று டாஸ்மாக் கடையை முற்று-கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., ஆனந்தராஜ், தாசில்தார் வேலு, இன்ஸ்பெக்டர் சாவித்திரி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், கடையை அகற்றும் வரை போராட்டத்தில் ஈடுப-டுவோம் என கூறிய மக்கள், நண்பகல், 12:00 முதல், மதியம், 2:30 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், 26 பெண்கள் உட்பட, 40 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மாணவ, மாணவியரை கைது செய்-யாமல் அனுப்பி வைத்தனர்.

Advertisement