தோட்டக்கலைத் துறை அலுவலர் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: தமிழகத்தில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0வை ரத்து செய்ய வலியுறுத்தி, தோட்டக்கலைத்துறை அலுவலர் சங்க கூட்டமைப்பு சார்பில், விழுப்புரத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கி பேசினார். தோட்டக்கலை உதவி அலுவலர்கள் கவுதம், வளர்மதி, பிரவீன் முன்னிலை வகித்தனர். வட்டார அலுவலர்கள் ஜெய்சன், வளர்மதி, சந்திரசேகரன், மதிவாணன், கோபி உள்ளிட்ட அலுவலர்கள், சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், தோட்டக்கலைத்துறையின், தனித்துவம் மற்றும் வேளாண் சேவை பணிகள், நிர்வாக அமைப்பை பாதிக்கும் வகையில், அரசு கொண்டுவந்துள்ள உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் 2.0 என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த உழவர் அலுவலர் தொடர்புத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்தி, விவசாயிகளுக்கு தடையற்ற தொழில்நுட்பச் சேவைகள், அந்தந்த துறைகள் மூலம் தடையின்றி கிடைக்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும்
-
உலக சாம்பியனை வரவேற்ற 20 லட்சம் பேர் * ஸ்பெயின் முழுவதும் கொண்டாட்டம்
-
பாட்மின்டன்: சிந்து 'நம்பர்-8' * உலக தரவரிசையில் முன்னேற்றம்
-
இரண்டாவது சுற்றில் அனாஹத் * உலக ஸ்குவாஷ் ஜூனியர் சாம்பியன்ஷிப்பில்...
-
இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு * உலக கோப்பை தொடருக்காக...
-
மாநகராட்சியில் வேலை செய்ததற்கு பில் தொகை தாமதம்டெண்டர் எடுக்க அளில்லை: ஒப்பந்ததாரர்கள் ஓட்டம்
-
சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா: ஏற்பாடுகள் தீவிரம்