இரண்டாவது சுற்றில் அனாஹத் * உலக ஸ்குவாஷ் ஜூனியர் சாம்பியன்ஷிப்பில்...

ஆன்டரியோ: உலக ஸ்குவாஷ் ஜூனியர் சாம்பியன்ஷிப் முதல் சுற்றில் அனாஹத் சிங், ஆர்யவீர் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
கனடாவில் உலக ஸ்குவாஷ் ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் அனாஹத் சிங், தகுதிச்சுற்றில் இருந்து முன்னேறிய ஆஸ்திரேலியாவின் லில்லி வில்சனை சந்தித்தார். இதில் அனாஹத் சிங், 11-2, 11-1, 11-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
இந்தியாவின் அனிகா, 11-7, 11-3, 11-5 என ஜப்பானின் குவாஹராவை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் சான்வி, 11-9, 9-11, 11-8, 7-11, 11-6 என்ற கணக்கில் நெதர்லாந்தின் எல்க் மோல்சை வென்றார்.
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய வீரர் ஆர்யவீர், ஜெர்மனியின் லெவி விஸ்செரை சந்தித்தார். இதில் ஆர்யவீர் 12-10, 11-6, 11-9 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் குர்வீர் சிங், 11-4, 11-1, 11-7 என நெதர்லாந்து வீரர் குயின்டன் வானை சாய்த்தார். மற்ற போட்டிகளில் இந்தியாவின் யூஷா நபீஸ், புரவ் ராம்பியா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

Advertisement