கிரீன் மாரத்தான் போட்டி 500 பேர் பங்கேற்பு

திருப்போரூர்: திருப்போரூர் ஆறு வழிச்சாலையில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட த.வெ.க.,வினர் சார்பில், 'கிரீன் திருப்போரூர் மாரத்தான் 2026' என்ற தலைப்பில் நேற்று மாரத்தான் போட்டி நடந்தது.

இதில், திருப்போரூர் த.வெ.க., - எம்.எல்.ஏ., விஜயராஜ், செங்கல்பட்டு த.வெ.க., - எம்.எல்.ஏ., தியாகராஜன், ஆகியோர் பங்கேற்று மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தனர். இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு 20,000 ரூபாய், இரண்டாமிடம் பிடித்தவர்களுக்கு 15,000 ரூபாய், மூன்றாம் இடம்பிடித்தவர்களுக்கு 10,000 ரூபாயக்கான காசோலை வழங்கப்பட்டது.

Advertisement