சிறுதொழில்களுக்கு பிணையில்லா கடன்; நடைமுறைப்படுத்த வங்கிகள் தயக்கம்
மும்பை: சிறு தொழில்களுக்கு 20 லட்சம் வரை வங்கிகள் பிணையில்லா கடன் வழங்க வேண்டும் என்பதை ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது. கடன் வழங்குவதில் உள்ள சிக்கல்களையும் சவால்களையும் களைய வேண்டும் என்று வங்கிகள் கோரிக்கை விடுத்து உள்ளன.
இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: சிறுதொழில் நிறுவனங்களுக்கு 20 லட்சம் வரை பிணையல்லா கடன் வழங்கும் திட்டம் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து உள்ளது.
அரசின் கடன் உத்தரவாத திட்டங்களின் கீழ் இந்த கடன்கள் அனைத்தும் தகுதி பெறாதது, மேலும் கூடுதல் உத்தரவாத கட்டணம் அல்லது சேவை கட்டணங்களை செலுத்த கடன் பெறுவோர் விருப்பம் காட்டாதது போன்ற காரணங்களால் இந்த கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் வங்கிகள் சிக்கலை சந்தித் து வருகின்றன. போதுமான சொத்துகளை பிணையாக வழங்க முடியாத சிறு, குறு தொழில் நிறுவனங்கள் எளிதாக வங்கி கடன் பெறும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால், நடைமுறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக இந்த உத்தரவை செயல்படுத்துவதில் வங்கிகள் தடுமாறி வருகின்றன. இந்த விவகாரத்தில் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குமாறு ரிசர்வ் வங்கிக்கு, வங்கிகள் கோரிக்கை விடுத்து உள்ளன. இவ்வாறு தெரிவித்து உள்ளன.
மேலும்
-
உலக சாம்பியனை வரவேற்ற 20 லட்சம் பேர் * ஸ்பெயின் முழுவதும் கொண்டாட்டம்
-
பாட்மின்டன்: சிந்து 'நம்பர்-8' * உலக தரவரிசையில் முன்னேற்றம்
-
இரண்டாவது சுற்றில் அனாஹத் * உலக ஸ்குவாஷ் ஜூனியர் சாம்பியன்ஷிப்பில்...
-
இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு * உலக கோப்பை தொடருக்காக...
-
மாநகராட்சியில் வேலை செய்ததற்கு பில் தொகை தாமதம்டெண்டர் எடுக்க அளில்லை: ஒப்பந்ததாரர்கள் ஓட்டம்
-
சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா: ஏற்பாடுகள் தீவிரம்