அலுமினிய இறக்குமதி வரியை நீக்க கோரிக்கை
புதுடில்லி: முதன்மை அலுமினிய இறக்குமதிக்கு 8.25 சதவீதமும், அலுமினிய கழிவு இறக்குமதிக்கு 2.75 சதவீதமும் சுங்க வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியை நீக்க சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து உள்ளன.
இது குறித்து உற்பத்தியாளர்கள் தெரிவித்து உள்ளதாவது: முதன்மை அலுமினி யத்துக்கு 8.25 சதவீதமும், அலுமினிய கழிவு பொருட்களுக்கு 2.75 சதவீதமும் உள்ள இறக்குமதி சுங்க வரியை நீக்க வேண்டும்.
இந்த இறக்குமதி வரி, உள்நாட்டில் வாங்கும் அலுமினியத்தின் விலைக்கு இணையாக உள்ளது. இதனால் பல்வேறு அலுமினிய பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.
சரக்கு போக்குவரத்து செலவு, எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்டவை ஏற்கனவே பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் சுங்க வரி குறைக்கப்பட்டால் உற்பத்தி செலவு குறைவதுடன் தொழிற்சாலைகளின் உற்பத்தி திறன், வர்த்தகம், ஏற்றுமதியும் அதிகரிக்கும். இவ்வாறு தெரிவித்து உள்ளனர்.
மேலும்
-
உலக சாம்பியனை வரவேற்ற 20 லட்சம் பேர் * ஸ்பெயின் முழுவதும் கொண்டாட்டம்
-
பாட்மின்டன்: சிந்து 'நம்பர்-8' * உலக தரவரிசையில் முன்னேற்றம்
-
இரண்டாவது சுற்றில் அனாஹத் * உலக ஸ்குவாஷ் ஜூனியர் சாம்பியன்ஷிப்பில்...
-
இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு * உலக கோப்பை தொடருக்காக...
-
மாநகராட்சியில் வேலை செய்ததற்கு பில் தொகை தாமதம்டெண்டர் எடுக்க அளில்லை: ஒப்பந்ததாரர்கள் ஓட்டம்
-
சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா: ஏற்பாடுகள் தீவிரம்