பார்லி மழைக்கால கூட்டத்தொடரின் முதல்நாளே எதிர்க்கட்சிகள் அமளி; இரு அவைகளும் ஒத்திவைப்பு
நமது டில்லி நிருபர்
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) எதிர்கட்சியினரின் அமளியுடன் துவங்கியது. சமீபத்திய நீட் வினாத்தாள் லீக், ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரங்கள் எழுப்பப்பட்டன. அமளியால் இருஅவைகளும் நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டன.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) காலை 11 மணிக்கு துவங்கியது. வரும் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடக்கிறது. இதில், பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த சூழலில், இன்று காலை மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) எதிர்கட்சியினரின் அமளியுடன் துவங்கியது. சமீபத்திய நீட் வினாத்தாள் லீக், ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரங்கள் எழுப்பப்பட்டன.
லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் கூச்சல், குழப்பம் நிலவியது. சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கண்டு கொள்ளாமல் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை மதியம் 12 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார். தொடர்ந்து அமளி நீடித்ததால் அவை நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் நீட் வினாத்தாள் லீக், ராமர் கோயில் நன்கொடை முறைகேடு குறித்து விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டதால் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு 12 மணிக்கு கூடிய இரு அவைகளும் அமளி காரணமாக மதியம் 12.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக ராஜ்யசபா நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
பார்லி மழைக்கால கூட்டத்தொடர் முதல் நாளே எதிர்க்கட்சிகள் அமளி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
லைவ் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
கேன்டீன்ல தீவனம். வெளியில கூச்சல். இதை தான் செய்யறானுகா
நீட் வினாத்தாள் லீக், ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரங்கள் எழுப்பப்பட்டன. அவைகள் இரண்டுமே அரசால் தீர்க்கப்பட்ட விஷயங்கள் இனி அவைகளைப்பற்றி பேசி என்ன பயன் இரண்டையும் அரசு சரி செய்துவிட்டது மக்களும் ஏற்றுக்கொண்டு விட்டனர் மேலே என்ன செய்ய வேண்டுமென்று எதிர்
கட்சிகள் யோஜனை சொன்னால் அவைகளை அரசு வரவேற்கும் வீணாக நேரத்தை போக்கி மக்களுக்கு பயன்படாத நடவடிக்கைகளை பின் பற்றினால் நேரமும் காலமும்தான் வீணாகும் பயனுள்ள விவாதம் நடைபெறாது
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பில் ஒற்றுமையாக இருக்கிறார்கள் . தேர்தல் வந்தால் பிரிகிறார்கள். வெளிநடப்பு செய்யும் கட்சிக்காரர்களின் எம் பி பதவியை பறிக்க வழிவகைகளை ஆராய வேண்டும் . மக்களின் வரிப்பணத்தில் பாராளுமன்றம் , நாடாளுமன்றம் இயங்குகிறது . அதை புரிந்துக்கொள்ளாத இயங்கங்களை மக்களும் விலக்க வேண்டும் . ஓட்டளிக்கக்கூடாது .
எப்போதும் நடப்பதுதான் இப்போதும் நடந்து வருகிறது. எதிர்கட்சிகள் தொடர் அமளி. சபை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு. சபை மீண்டும் கூடியதும் எதிர்கட்சிகள் திரும்பவும் அமளி. மீண்டும் ஒத்தி வைப்பு. இதை மீறி எதுவும் நடக்காது.இதுக்கு நடுவில சோதிமணி அன் கோவின் காமெடிகளும் நடந்தேறும்.
மன்மோகன் சிங் அவர்களுக்கு இவர்கள் செய்தது போல அமளி: ஹா ஹா ஹா ஹா
மரியோ..இப்போ காங்கிரசு கட்சியே இல்லையே...
லண்டன் காரரே? என்ன அமளி செஞ்சாலும் சரி ராகுல் பாச்சா மோடியிடம் பலிக்காது. ஹி,ஹி,ஹி,ஹி....
இந்திய தேச விரோத கான்கிராஸ் மற்றும் பிரிவினைவாத தீயசக்திகள் , தேசத்தை முன்னேற்ற விடாமல், மக்களுக்கு நன்மைகள் வரக்கூடாது என்று போராடுகிறார்கள்.. அரசியல் லாபத்திற்காக பாராளுமன்றத்தில் வெளிநடப்பு செய்வது, ஏற்று கொள்ள முடியாது.. மோடி ஜீக்கு மக்கள் 400 மேல் கொடுத்து இருந்தால் இந்த பிரச்சினை வராது..
நாட்டின் எதிரிகளையும் எதிரிகளுக்கு ஓட்டு போடும் கயவர்களையும் சேர்த்து நாடு கடத்துவது நல்லது
மக்களின் ஒட்டு மொத்த இந்தியாவின் எதிரிகள் இவர்கள்.
கூட்டத்தொடரின்போது மக்கள் பிரச்சினையை பேசி, அதை தீர்க்க முயலுவதை விட்டுவிட்டு, இப்படி வொவொரு கூட்டத்தொடரின்போதும் ரகளை செய்து வெளியேறினால், மக்கள் பிரச்சினை தீர்வுக்கு வராது. இப்படி ரகளை செய்து வெளியேறுவதன் மூலம் உங்களிடம் நியாயமாக பேச ஒன்றும் இல்லை என்றுதான் தோன்றுகிறது.
எதிர்க்கட்சியினர் வழக்கம்போல் அவையை நடத்த விட மாட்டார்கள்மேலும்
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி
-
54 ஊழியர்கள் நியமனத்தை ரத்து செய்ய ஏன் தாமதம்? கோர்ட் தீர்ப்பு வந்தும் மாநகராட்சி இழுபறி
-
குளத்தை ஆய்வு செய்யாமல் அதிகாரிகள் அளித்த பதிலை ஏற்க முடியாது! உண்மைக்கு மாறான தகவலால் விவசாயிகள் அதிர்ச்சி
-
பழங்குடியின மாணவர்களுக்கு சிங்கப்பெண் படை நேசக்கரம்
-
உலக சாம்பியனை வரவேற்ற 20 லட்சம் பேர்; ஸ்பெயின் முழுவதும் கொண்டாட்டம்
-
பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்ட ராகுல், பிரியங்கா கைது! டில்லியில் பதற்றம்