சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் செயல்பாட்டிற்கு வர வாய்ப்பில்லை; இந்தியா திட்டவட்டம்
நமது நிருபர்
''சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் செயல்பாட்டிற்கு வர வாய்ப்பு இல்லை'' என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தம் 1960ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன்படி, சட்லெஜ், பியாஸ், ரவி ஆகிய மூன்று நதிகளும் முற்றிலும் இந்தியாவுக்கு சொந்தமானவை. அவற்றில் வரும் நீரை இந்தியா பயன்படுத்திக் கொள்ளலாம். சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்று நதிகளும் பாகிஸ்தானுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது.
இந்த நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்டதாகவும், ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா திட்டவட்டமாக அறிவித்து விட்டது. தற்போது சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் செயல்பாட்டிற்கு வர வாய்ப்பு இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவந்து, பேச்சுவார்த்தை நடத்தும் வரை, தற்போதைய சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க முடியாது. இந்த ஒப்பந்தத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு வர வாய்ப்பு இல்லை. பாகிஸ்தான் இனிவரும் காலங்களில் எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும். இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன. ஒப்பந்தத்தை நிறுத்திவைத்த இந்தியாவின் முடிவால் நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்ற பாகிஸ்தானின் கூற்றையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது.
இந்த நாட்டில் அரசாங்கத்தில் உள்ள தீவிரவாதிகளை ஒழிக்காமல் அவர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் ஓய்விற்கு பின் ஓய்வூதியம் வழங்குகின்றனர்.அவர்களை களை எடுத்தால் எல்லை தாண்டிய தீவிர வாதம் இருக்காது.
100 % சரி ..தீவிரவாதம் முடியும் வரை தண்ணியே இல்லை ..வீரமா முடிவு எடுக்கும் மோடி பிஜேபி அரசு , khangress அரசு இல்லை
தீயமுக அழியும்போது. இன்னும் நாலைந்து வருடங்களில்.
ஐயோ ஐயோன்னு ஒரு கூட்டம் வாயிலும் வயிற்றிலும் அடிதுக்கொள்ளும். ரகுமான்கள் சமாதான புறா பறக்க விடுவார்கள். அவர்கள் எத்தனை பேரை கொன்றாலும் சரி குண்டு வச்சாலும் சரி தண்ணியை நிறுத்துவது கொடுஞ்செயல் அப்படின்னு அமீர்கள் தத்துவம் பேசுவானுக.
Congress காங்கிரஸ்ஸாக செயல்படாமல் KHANGRESS ஆக செயல்பட்டதாலான விளைவு, அதனால் தான் அந்த கட்சியும் தி மு க வும் பாதாளத்தில் விழுந்துவிட்டன
தீவிரவாதத்திற்கு தண்ணீர் கிடையாது.
ஆக்கிரமிப்பு காஷ்மீரை எப்பொழுது மீட்பது.
avasasara padaathernga.pazham nazhuvi paalil vizha povuthu.POK people erkanave we are not Pakistanis nu sollittanga. Afg Balu maathiriye aavum namakku war selavu michcham
சங்கரா அது அவங்க உள் நாட்டு பிரச்னை..நம்ம வேலையை நம்ம பார்போம்
இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டால் இது நிலைமை .இது மோடி அரசு,கான்கிரஸ் அரசு அல்ல.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் இந்தியாவை பாதிக்கும் வகையில் எப்படி தவறாக வரையப் பட்டது என்று ஒரு சிறு குறிப்பையும் கொடுத்திருக்க வேண்டும்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் செயல் பாட்டிற்கு வர பாகிஸ்தான் நில பகுதி இந்திய பதிவு துறை கீழ் வர வேண்டும். ஆப்கான் , பாகிஸ்தான், பங்களாதேஷ் இந்து மக்கள் வளப்படுத்திய பூமி. கொடிய வன்முறை மூலம் இவைகள் ஆக்கிரமிக்க பட்டவை. சர்வதேச சமுதாயம் ஒரு கட்ட பஞ்சாயத்து அமைப்பு? அடுத்த நூற்றாண்டில் இழந்த நில பகுதிகளை இந்தியா மீட்க வேண்டும். அது வரை இந்த பகுதிகளில் அமைதி நிலை படுத்த முடியாது.