புதுச்சேரியில் பெண்ணை கொன்று நகை கொள்ளை

1

புதுச்சேரி: புதுச்சேரியில், ரமணி, 40, என்ற பெண்ணை குத்தி கொன்று நகைகளை பறித்து சென்ற மர்ம நபரை, போலீசார் தேடுகின்றனர்.

புதுச்சேரி, கருவடிகுப்பத்தில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் வசிப்பவர் ராஜா, 48. இவரது மனைவி ரமணி, 40.

ராஜா, அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். நேற்று மதியம், 1:00 மணியளவில் வீட்டிற்கு சென்றபோது, வீட்டின் பின்பக்கத்தில், வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில் ரமணி, ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவர் அணிந்திருந்த தாலி செயின், கம்மல் உட்பட, 6 சவரன் நகைகள் காணாமல் போயின.

லாஸ்பேட்டை போலீசார், மர்ம நபரை தேடுகின்றனர்.

Advertisement