அய்யனார் கோயில் ஆற்றிலிருந்து 6-வது மைல் நீர்த்தேக்கத்திற்கு குழாய் நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு
ராஜபாளையம்: ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆற்றிலிருந்து 6-வது மயில் நீர்த்தேக்கத்திற்கு புதிய குழாய் பதிப்பது குறித்து நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.
ராஜபாளையம் நகரின் குடிநீர் தேவைக்காக மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் அய்யனார் கோயில் ஆற்றில் இருந்து தடுப்பணை அமைத்து 6-வது மைல் பகுதியில் நீர்த்தேக்கம் அமைத்து நகர் பகுதி மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் சப்ளை ஆகிறது.
வறட்சியின் போது நீர்த்தேக்கத் தை சுற்றியுள்ள 29 ஆழ்துளைக் குழாய்கள், 11 கிணறுகள் மூலம் தண்ணீர் சேகரித்து விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஏற்கனவே உள்ள குழாய்கள் மூலம் நீர் தேக்கம் நிரம்புவதற்கு 40 நாட்கள் ஆவதால் சப்ளையில் சிக்கல் இருந்து வருகிறது.
எனவே தடுப்பணை அருகே புதிய குழாய் பதிக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில் நகராட்சி நிர்வாக ஆணையர் மதுசூதன் ரெட்டி 6-வது மேல் நீர்த்தேக்கம், குடிநீர் சுத்திகரிப்பு மையம், தடுப்பணை ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தார். மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் தேவேந்திரன், மண்டல பொறியாளர் சணல் குமார், நகராட்சி தலைவர் பவித்ரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
கரப்பான்பூச்சி ஜனதா இயக்கம் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள்; ஆர்எஸ்எஸ் குற்றச்சாட்டு
-
விருத்தாசலம் தனி மாவட்டம் பிரேமலதா எம்.எல்.ஏ., மனு
-
அரசு பள்ளியில் நுாலகம் எரிந்து சாம்பல்: திட்டக்குடியில் பரபரப்பு
-
வேளாங்கண்ணியை தொடர்ந்து தாம்பரம் ரயிலிலும் ஸ்ரீவி.,யில் ஸ்டாப்பிங் இல்லை பயணிகள் வேதனை
-
கடையை உடைத்து பொருள் திருட்டு
-
வாகன ஓட்டிகள் சிரமம்