டூ- - வீலர் மீது கார் மோதல் 3 வாலிபர்கள் உயிரிழப்பு
திருப்பாச்சேத்தி: திருப்புவனம் அருகே, டூ - வீலர் மீது கார் மோதியதில், பாண்டியராஜன், 32, வெங்கடேஷ், 27, சிபி சக்கரவர்த்தி, 22, ஆகியோர் உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வடகரையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பாண்டியராஜன். நடிகரும் முதல்வருமான விஜயின் தீவிர ரசிகர். இவர், நண்பர்கள் வெங்கடேஷ். சிபி சக்கரவர்த்தி ஆகியோருடன் திருப்புவனத்தில் இருந்து, ஒரே டூ - வீலரில் கானுாரில் நடந்த முளைப்பாரி திருவிழாவிற்கு சென்றார்.
அதன்பின், அங்கிருந்து மானாமதுரை சென்று, தியேட்டரில், ஜனநாயகன் சினிமாவை பார்த்துவிட்டு, நேற்றிரவு, 8:00 மணியளவில் மதுரை -- ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில், திருப்புவனத்துக்கு டூ - வீலரில் சென்று கொண்டிருந்தனர்.
திருப்பாச்சேத்தி அருகே, இளையான்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார், டூ - வீலரின் பின்னால் அதிவேகமாக மோதியதில், டூ - வீலரில் சென்ற மூவரும் உயிரிழந்தனர். திருப்பாச்சேத்தி போலீசார், கார் டிரைவரான மதுரையைச் சேர்ந்த அரவிந்த், 32, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
நீட் தேர்வு பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது; அமைச்சர் நிர்மல்குமார்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் (ஜூலை 25)
-
அனுஷ உற்சவம்; காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு அபிஷேகம்
-
டில்லி போராட்டத்தில் கிரிமினல் குற்றவாளிகள்; 2500 பேரை அடையாளம் கண்ட போலீசார்
-
3வது பதவிக்காலம் சிறப்பாக இருக்கும்; விளையாட்டாக சொல்கிறேன் என அதிபர் டிரம்ப் நகைச்சுவை
-
ருமேனியாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிப்பு